சென்னை: தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மாவட்டம் | மழை அளவு (சென்டிமீட்டரில்) |
ஆழியார் (கோயம்புத்தூர்) | 15 சென்டிமீட்டர் |
திருமூர்த்தி அணை (திருப்பூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்) | 14 சென்டிமீட்டர் |
அமராவதி அணை (திருப்பூர்) | 12 சென்டிமீட்டர் |
கொட்டாரம் (கன்னியாகுமரி) | 9 சென்டிமீட்டர் |
பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்) | 8 சென்டிமீட்டர் |
குளச்சல் (கன்னியாகுமரி), மடத்துக்குளம் (திருப்பூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), திருப்பத்தூர் (சிவகங்கை), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) | 7 சென்டிமீட்டர் |
சந்தியூர் KVK AWS (சேலம்), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), தர்மபுரி (தர்மபுரி), மைலாடி (கன்னியாகுமரி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), தர்மபுரி PTO (தர்மபுரி), கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்) | 6 சென்டிமீட்டர் |
இரணியல் (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), பென்னாகரம் (தர்மபுரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), திருமயம் (புதுக்கோட்டை), பழனி (திண்டுக்கல்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி) | 5 சென்டிமீட்டர் |
தக்கலை (கன்னியாகுமரி), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), கரூர் (கரூர்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்), ஓசூர் (கிருஷ்ணகிரி), ஒகேனக்கல் (தர்மபுரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), களியல் (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி) | 4 சென்டிமீட்டர் |
அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட குறைவாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை திருத்தணியில் 36.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 30 டிகிரி முதல் 33 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19 டிகிரி முதல் 26 டிகிரிசெல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 35.8 டிகிரி செல்சியஸ் (-3.3 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.3 டிகிரி செல்சியஸ் (-2.9 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 5:30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25 ஆம் தேதி மாலை நிலவக்கூடும். தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மே 25 முதல் 28 வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்று முதல் மே 26 ஆம் தேதி வரை, அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறையக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். மே 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதையும் படிங்க: அடுத்த இரு நாட்களுக்கு 'ஆரஞ்சு' அலர்ட் .. தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு! - Orange Alert In Tamil Nadu