சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதற்கான சீசன் மழை தற்போது தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது. இதனால் தமிழக அரசு முழுவீச்சில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
இன்று முதல் சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும், இன்று முதல் அடுத்த 3 நாட்கள் வானிலையில் நடக்கும் மாற்றம் பற்றியும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிகும், தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும் மழை பெய்யுள்ளது. 7 இடங்களில் கனமழையும், 21 இடங்களிள் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. அதுக பட்சமாக மதுரையில் 16 செ.மீ மழையும், திருபுவணத்தில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய மேற்கு அரபிக்க்கடல் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. நாளை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குரைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக அடுத்து வரும் 5 தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும்.
இதையும் படிங்க: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி? ஒரு வாரம் தமிழ்நாட்டுக்கு கனமழை எச்சரிக்கை!
அடுத்த 24 மணிநேரத்தில், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தேதி | கன முதல் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் | கனமழை பெய்யும் மாவட்டங்கள் |
அக்டோபர்14 | விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் | சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் |
அக்டோபர்15 | சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி | வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் |
அக்டோபர்16 | திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் | திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி |
அக்டோபர்17 | திருவள்ளூர், இராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி | சென்னை, காஞ்சிபுரம் திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு |
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இன்று முதல் விட்டு விட்டு மழை துவங்கி நாளை முதல் படிப்படியாக அதிகரித்து 15 , 16 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழையாக பெய்யக்கூடும்.
மீனவருக்கான எச்சரிக்கை : மீனவருக்கான எச்சரிக்கை பொறுத்த அளவில் 13 முதல் 15ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 16, 17 தேதிகளில் வட தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 52 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசப்படும்.
வங்க கடல் பொறுத்தவரையில் இன்று தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் 14, 15 ஆகிய தேதிகளில் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், தெற்கு வங்க கடல், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.தென்மேற்கு பருவமழையானது தற்போது விலகிக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து முற்றிலுமாக விலகி வடகிழக்கு பருவமழை 15, 16 தேதிகளில் தொடங்குவதற்கான சாதகங்கள் உள்ளன” இவ்வாறு அவர் தெரிவித்தார்.