சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணனுடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
தேர்தலின் பொழுது அரசியல் கட்சிகள் வேட்பாளர்களுக்கான நடத்தை விதிமுறைகள் குறித்து காங்கிரஸ் பாஜக இந்திய கம்யூனிஸ்ட் திமுக உள்ளிட்ட கட்சிகளின் சென்னை மாவட்ட கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆலோசனைக்குப் பின் சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இன்று நடைபெற்ற அரசியல் பிரதிநிதிகள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சென்னை உள்ளிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இன்றைய ஆலோசனையில் கலந்து கொண்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை நேரடியாக அறிமுகப்படுத்தி, தேர்தல் கூட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் அவர்களுக்கு இருக்கின்ற சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அவர்கள் கேட்டுக் கொண்ட நடைமுறை சிக்கல்களைக் குறித்தும் அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளோம்.
மறைந்த தலைவர்களின் சிலைகள், படங்களை வெளியிடுவது குறித்தும் சுவரொட்டி, அனைத்தையும் உடனடியாக நீக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதால் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. 579 பதட்டமான பூத்களை கண்டறிந்து வைத்துள்ளோம், காவல்துறையுடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் என்பது உங்களது உரிமை. பொதுமக்கள் பெயர்கள் எந்த தொகுதியில் இருக்கிறது என்பதை அறிந்து கட்டாயம் வாக்களிக்க வேண்டும். 63 ஆயிரத்து 840 பேர் 85 வயதிற்கு மேல் உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எங்கள் சார்பாகச் செய்துள்ளோம்" என்றார்.
மேலும், பத்திரிகையாளர்களுக்குத் தேர்தலுக்கான பாஸ் வழங்குவது குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், "இன்று மாலை தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் மேலும் பத்திரிகையாளருக்கான பாசஸ் குறித்தும், பத்திரிகையாளரின் ஓட்டுகள் போடும் வழிமுறைகள் குறித்தும் இன்று மாலை தேர்தல் ஆணையர் அதிகாரிகளிடம் ஆலோசனை முடிந்த பின் தெரிவிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: உதவிய இளைஞர்களுக்கு ரயிலில் லிப்ட் கொடுத்த ரயில் பைலட்.. நெல்லையில் நடந்தது என்ன?