ETV Bharat / state

"தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து விடக்கூடாது" - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்! - சத்சங் நிகழ்ச்சி

Sri Ravi Shankar: தற்போது தற்கொலை அதிகரித்து வருகிறது எனவும், அதனால் அதில் இருந்து விடைபெற தியானம் அவசியம் என ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 10:48 PM IST

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

கோயம்புத்தூர்: கோவை கொடிசியா வளாகத்தில் சத்சங் நிகழ்வில் வாழும், கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் தியான முறைகளை பல்லாயிரக்கணக்கானோருக்கு கற்றுக் கொடுத்தார். மேலும், போதைப் பொருளுக்கு எதிரான உறுதி மொழியும் எடுத்து கொள்ளப்பட்டது.

முன்னதாக, கோவை கொடிசியா அருகே தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், "தற்போது மன அழுத்ததால் தற்கொலை அதிகரித்து வருகிறது. 4 பேரில் ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கின்றனர். 40 வினாடிக்கு ஒரு தற்கொலை நடைபெறுகின்றது.

தியானத்தில் மதம் இல்லை. மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான டென்சன். மற்றவர்களுக்கு வேலை என ஒவ்வொருவருக்கும் நிறைய டென்சன் இருக்கின்றது. இதில் இருந்து விடைபெற தியான நிலை மேற்கொள்வது அவசியம்.

பொறியியல் கல்லூரிகளில் கூட தியானம் பாடம் சொல்லி கொடுக்கின்றனர். அமெரிக்காவில் 108 பல்கலைக்கழகங்களில் தியானம் செய்தால், அதற்கான மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது. மன அழுத்தத்தை போக்க முடியாத நிலையிலேயே தற்கொலைகள் நடைபெறுகின்றன. போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கண்டிப்பான விதிகளை கொண்டு வர வேண்டும்.

அதேபோல், போதைப்பொருளுக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு தியான நிகழ்வுகளை நடத்தினோம். தற்போது தமிழகத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு தியான நிகழ்வு நடத்தப்படுகின்றது. மற்ற மாநிலங்களான தெலங்கானா, கேரளா போன்ற இடங்களிலும் போதைப் பொருளுக்கு எதிரான நிகழ்வுகளை நடத்தி வருகிறோம்.

பஞ்சாப், ஹரியானா மாநிலப் பகுதிகளை பார்த்தால் கண்ணீர் வரும். அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பரவி இருக்கின்றது. வேலைக்கு செய்வது இல்லை. தமிழகத்தில் அதுபோன்ற நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு நிகழ்வு நடத்துகின்றோம்.

போதைப்பொருளை கட்டுப்படுத்த அரசு பாலிசி வகுத்து, அதை முறையாக செயல்படுத்துதல் மூலமும், மக்கள் இவற்றை வெறுப்பதன் மூலமே ஒழிக்க முடியும். இதை அடித்தளத்தில் இருந்து கொண்டு வந்தால் மட்டுமே முடியும். மேலும், நாகநதி திட்டம் சிறப்பாக செயல்படுகின்றது.

தமிழகத்தில் 85 நதிகள் ஆவணங்களில் இருக்கிறது. ஆனால் சில நதிகள் மட்டுமே ஓடுகின்றது. மற்ற நதிகளை புனரமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. கோவையில் கௌசிகா நதி, நொய்யல் நதி புனரமைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் 85 நதிகளையும் மீட்டால் சுற்றுசுழல் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை இருக்காது. குறிப்பாக, தண்ணீர் பிரச்சினை முடிவுக்கு வரும்" என்றார்.

இதையும் படிங்க: மும்பை தொழிலதிபரை கரம் பிடிக்கும் வரலட்சுமி சரத்குமார்; வைரலாகும் நிச்சயதார்த்தப் புகைப்படங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.