ETV Bharat / state

எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; விசாரணையைத் தொடங்கிய மருத்துவக் குழு! - Weight Loss Surgery Issue - WEIGHT LOSS SURGERY ISSUE

Weight Loss Surgery Issue: எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், விசாரணைக்குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, இரண்டு இணை இயக்குநர்கள் கொண்ட மருத்துவக்குழு பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 3:25 PM IST

Updated : Apr 25, 2024, 3:56 PM IST

சென்னை: புதுச்சேரி முத்தியால்பேட்டை அடுத்த டிவி நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன் மகன் ஹேமச்சந்திரன். இவர் உடல் பருமனைக் குறைப்பதற்காக சென்னை பம்மல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அனைத்து பரிசோதனைகளையும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர் பெருங்கோ மேற்கொண்டதாக செல்வநாதனின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ஹேமச்சந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து அவரின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் செல்போன் வாயிலாக இரங்கல் தெரிவித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இது தொடர்பாக விசாரணைக்குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இதனை அடுத்து, மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இரண்டு இணை இயக்குனர்கள் கொண்ட மருத்துவக்குழு பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணையைத் துவக்கி உள்ளது என்றும், அவர்கள் ஹேமச்சந்திரனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்து தரும் அறிக்கையின் அடிப்படையில் அரசுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் தீர்த்தலிங்கம்,இளங்கோவன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஹேமச்சந்திரனுக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

மேலும் அரசு மயக்கவியல் மருத்துவர் இதயநோய் மருத்துவர் குரோம்பேட்டை அரசு தலைமை மருத்துவமனை இயக்குநர் உள்ளிட்டோர் 3 மணி நேரத்திற்கு மேலாக தனியார் மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகின்றனர். அறுவை சிகிச்சைக்கு முன்பும், அறுவை சிகிச்சையின் போதும் என்னென்ன நடந்தது என மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் மயக்க மருந்து கொடுத்த சிறிது நிமிடத்திலேயே அவரது உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமாக எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டுள்ளனர். மேலும் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து, விசாரணை நடத்த அரசு மருத்துவக் குழுவினர் அங்கு சென்று உள்ளனர்.

மேலும் இரண்டு மருத்துவமனைகளிலும் தீவிர விசாரணை செய்து அறிக்கையாக சுகாதாரத் துறைக்கு அனுப்பப்படும் என அரசு மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரனையின் முடிவில் தான் மருத்துவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பது தெரியவரும் என மருத்துவக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் மரணம்.. புகாரில் கூறப்பட்டுள்ளது என்ன? - Weight Loss Surgery

Last Updated : Apr 25, 2024, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.