ETV Bharat / state

மழை வெள்ளத்தில் சிக்கிய பைக், கார்களை பாதுகாப்பது எப்படி? - மெக்கானிக் தரும் டிப்ஸ்!

மழைக் காலங்களில் கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களை பாதுகாப்பகாக வைப்பது எப்படி? சைலன்சரில் தண்ணீர் போய்விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது மெக்கானிக் தரும் டிப்ஸ்கள் குறித்து விரிவாக காண்போம்.

மெக்கானிக்  காமராஜ் மற்றும்  வேலாயுதம்
மெக்கானிக் காமராஜ் மற்றும் வேலாயுதம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2024, 7:08 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்தநிலையில் மழைக் காலங்களில் கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களை பாதுகாப்பாக வைப்பது எப்படி? சைலன்சரில் தண்ணீர் போய்விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டூ வீலர் மெக்கானிக் காமராஜ் மற்றும் கார் மெக்கானிக் வேலாயுதம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளனர்.

டூ வீலர் மெக்கானிக் காமராஜ்: "மழை வரும் நேரங்களில் பைக்கை நிறுத்தும் செய்யும் போது தண்ணீரில் நனைந்தாலோ அல்லது சைலன்சர்க்கு மேலே தண்ணீர் வருமாறு இருந்தாலும் ஒரு மேடான இடத்தில் நமது வாகனத்தை நிறுத்துவது நல்லது. அப்படி நிறுத்தும் பொழுது சைலன்ஸரின் ஓட்டையில் ஏதேனும் துணி வைத்து அடைத்துவிட்டால் தண்ணீர் உள்ளே செல்லாது.

கார், பைக் மெக்கானிக் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

சைலன்சரில் தண்ணீர் போய்விட்டால் என்ன செய்ய வேண்டும்? என்ஜினுக்கு மேல் தண்ணீர் சென்று விட்டால் வண்டியை உடனடியாக ஸ்டார்ட் செய்யக்கூடாது உடனடியாக மெக்கானிக் உதவி அணுக வேண்டும். ஏனென்றால் நாங்கள் ஸ்பார்க் பிளக், ஏர் பில்டர், கார்ப்பரேட்டர் அனைத்தையும் தண்ணீர் உள்ளே செல்லாத அளவிற்கு கழட்டி அதனுள் இருக்கும் தண்ணீரை வெளியே எடுத்து எளிதான முறையில் வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுப்போம்.

நீங்கள் ஸ்டார்ட் ஆகிறது என்று வண்டியை இயக்கினால், தண்ணீர் என்ஜினுக்குள் சென்று இன்ஜின் பழுதாகிவிடும். இன்ஜினில் இருக்கும் பாகங்கள் துருப்பிடித்து விடும் அது சரியாக இருக்காது. வண்டி மழையில் நனைந்து விட்டாலோ அல்லது தண்ணீர் நிரம்பிய இடத்தில் வண்டியை ஓட்டினாலோ ஆப் கிளட்ச்(half clutch) உடன் பிரேக்கை செலுத்திக்கொண்டு சைலன்சரினுள் தண்ணீர் போகாத அளவிற்கு ஆக்சலேட்டரை ஒரே அளவிற்கு செலுத்திக்கொண்டு நாம் செல்ல வேண்டும்.

மழைக்காலங்களில் வண்டியில் கரண்ட் சம்பந்தமான வேலை மற்றும் பெட்ரோலை வெளியே எடுத்து விட்டு செய்யும் வேலையை கவனமாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது சில நேரங்களில் தவறுகள் ஏற்பட்டு நெருப்பு உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த நேரங்களில் வண்டி எரிந்து விடலாம் அல்லது நமக்கும் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இது போன்ற வேலைகளை நீங்களவே செய்வதை தவிர்ப்பது சிறந்தது.

இதையும் படிங்க: மழைக்கால நோய்கள்...குழந்தைகள் முதல் பெரியவர்களை பாதுகாப்பது எப்படி? மருத்துவர் பரிந்துரை!

தற்காலிக தீர்வு: சிலர் சைலன்ஸர்க்குள் தண்ணீர் போகாமல் இருப்பதற்கு அதன் ஓட்டையிலிருந்து வான் நோக்கி நீளமான பைப் வைத்து வண்டியை இயக்குகின்றனர். இதனை தற்காலிகமாகப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். மேலும் இது சைலன்சற்குள் தண்ணீர் போகாமல் மட்டுமே பாதுகாக்குமே தவிர, மேக்னட் மற்றும் பிளக் மீது தண்ணீர் பட்டாலே ஸ்டார்டிங் ட்ரபுள் (starting trouble) ஏற்படும்" என தெரிவித்தார்.

காரை பாதுகாப்பது எப்படி? இது குறித்து கார் மெக்கானிக் வேலாயுதம் கூறியதாவது, "மழை வரும் காலங்களில் வாகனங்களை மேடான பகுதியில் பாதுக்காப்பாக நிறுத்த வேண்டும், மேலும் காரை இயக்க கூடாது அப்படி இயக்கினாலும் கீழிருந்து ஒன்றரை அடி அளவிற்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே ஒட்ட வேண்டும்.

அதற்கு மேல் இருந்தால் காரை ஓட்டக்கூடாது. அவ்வாறு ஓட்டினால் வண்டி பழுதாகி நின்றுவிடும். கார் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டாலோ அல்லது மூழ்கினாலோ உடனே ஸ்டார்ட் செய்யக் கூடாது. அதில் இருக்கும் தண்ணீர் இல்லாமல் காய வேண்டும். பின்னர் ஆயில் புதியதாக மாற்றிவிட்டு 4 சக்கரங்களையும் கழற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும் பிரேக் ஆகியவற்றை நன்றாக சரி பார்க்க வேண்டும்.இவ்வாறு சிறு, சிறு வேலைகள் செய்து விட்டுத்தான் வண்டியை எடுக்க வேண்டும். அப்படி செய்யாமல் வண்டியை இயக்கினால் கார் முழுவதும் பழுதாகிவிடும். மழை காலங்களில் பெரும்பாலும் காரை வெளியே எடுக்க வேண்டாம் என்பதுதான் எனது முதல் அறிவுரையாக இருக்கும். ஏதாவது அவசரம் என்றால் நாம் காரை வெளியே எடுக்கலாம்.

சிலர் சைலென்சரை அடைத்துவிட்டு வண்டியை இயக்குகின்றனர். இதனால் புகை வெளியேறாமல் அடைத்து பிரச்சனை ஏற்படும். ஆக்சிலலேட்டரை கொஞ்சமாக கொடுத்துக்கொண்டே வண்டியை இயக்க வேண்டும். பின்னர் பேட்டரி வயரை கழற்றி விட வேண்டும்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.