ETV Bharat / state

"எம்பி சீட் கிடைக்காத்தால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல" - கண்கலங்கிய வைகோ... - erode mp ganesamoorthi death

MDMK Vaiko: தேர்தலில் சீட் கிடைக்காததால்தான் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல. அவரது மகனையோ, மகளையோ, கட்சி நிர்வாகிளையோ கேட்டால் உண்மை என்ன என்பது தெரியும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

MDMK Vaiko
MDMK Vaiko
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 1:03 PM IST

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

சென்னை: கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக ஈரோடு எம்பி கணேசமூர்த்தி இன்று காலை உயிரிழந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கணேசமூர்த்தியை நேரில் காண, சென்னையிலிருந்து ஈரோடு செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

அதனைத் தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, "திராவிட இயக்கத்தின் தியாக வேங்கையாக, வாழ்நாளெல்லாம் லட்சியங்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கணேசமூர்த்தி 3 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவில் உறுப்பினராகச் சேர்ந்தால்தான், இடம் கொடுக்கப்படும் என்ற நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக உறுப்பினராக வேண்டா வெறுப்பில் சேர்ந்து எம்பியானார்.

இப்போது திமுக உறுப்பினராக இருந்து கொண்டு மதிமுகவில் வேறு பொறுப்பிற்கு வரமுடியாது. சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என அவரிடம் தெரிவிக்கப் பட்டு இருந்தது. இரு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள் என்றுதான் கூறி இருந்தார். ஒன்று மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்று சொல்லி இருந்தார். தேர்தல் முடிந்த பின்பும் இருவரும் வீடுகளுக்குச் சென்று வந்திருக்கின்றோம். உயிருக்கு உயிராக கடந்த 50 ஆண்டாகப் பழகி இருக்கின்றோம்.

கொள்கையும், லட்சியமும் பெரிது என வாழ்ந்தார். கணேச மூர்த்தி சமீபமாக மன அழுத்தத்தில் இருப்பதாக என்னிடம் சொன்னார்கள். எம்.பி இடம் கொடுப்பது என்ற விவகாரத்தில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டியவர், இந்த முடிவிற்கு வருவார் என நினைக்க வில்லை. பெரிய இடி தலையில் விழுந்தததைப் போல இருக்கின்றது, எனக் கூறிய வைகோ கண்ணீர் விட்டு நா தழுதழுக்கப் பேசினார்.

மருத்து குடித்து விட்டார் என்ற போதே எனக்கு உயிர் போய்விட்டது. ஆனால் கணேசமூர்த்தி எம்.பி சீட் கிடைக்காததால் இறந்தார் என்பது உண்மையல்ல. அவரது மகனையோ, மகளையோ அல்லது கட்சி நிர்வாகிகளையோ கேட்டால் உண்மை என்ன என்பது தெரியும். அவர் மறைந்தார் என்ற செய்தி என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முதலில் அவர் மருந்து குடித்தார் என்ற செய்தியையே என்னால் தாங்க முடியவில்லை. ஏனென்றால் அவ்வளவு மன உறுதி படைத்தவர்.

நெஞ்சில் துணிவு கொண்டவர், எதைப் பற்றியும் கவலைப்படாதவர், இத்தனை ஆண்டுகளாக எந்தப் பதவியிலும் இல்லை என்பதைப் பற்றிக் கவலைப்படாதவர். கொங்கு மண்டல திராவிட இயக்க சரித்திரத்தில் அழியா நட்சத்திரமாக இருப்பார் என்பதை வேதனையோடும், மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைக் கண்ணீரோடு தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரோடு எம்பி கணேசமூர்த்தி மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின், ஈபிஎஸ், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்! - Erode MP Ganesamoorthy

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.