ETV Bharat / state

சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி 50 லட்சமாக உயர்வு - மேயர் பிரியா - Tn assembly 2024

Mayor Priya: சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் வார்டு மேம்பாட்டு நிதியை 45 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

Tn assembly 2024
மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி 50 லட்சமாக உயர்வு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 9:17 PM IST

சென்னை: நடப்பாண்டிற்கான சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நேற்று (பிப்.21) மேயர் பிரியா தாக்கல் செய்தார். இந்த நிலையில், அந்த பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் 34 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசினர்.

பட்ஜெட் மீதான விவாதத்தைத் துவக்கி வைத்து நிலைக்குழு தலைவர் (நகரமைப்பு) இளைய அருணா பேசும்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்தது போல மாநகராட்சி பட்ஜெட்டும் அமைந்துள்ளது. மேயர் மேம்பாட்டு நிதி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் மாமன்ற உறுப்பினர்கள் நிதி உயர்த்தப்பட்டது போதாது. உறுப்பினர் நிதியும் 50 சதவீதம் உயர்த்த வேண்டும்.

மும்பை மாநகராட்சியில் உள்ளது போலக் கொசுப்புழு உற்பத்தியைத் தடுக்க மீன்கள் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். சாலைகளில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் சென்னையின் அழகு கெட்டுப் போகிறது. அந்த வாகனங்களை அகற்ற சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பட்ஜெட் கல்வியாளர், தொழில்முனைவோர், மருத்துவர்கள், எதிர்க்கட்சியினர் என அனைவரும் பாராட்டும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு, "இந்த பட்ஜெட் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட், ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சித்தாலும், தமிழக மக்களுக்கு நாங்கள் சேவையாற்றுவோம் என்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்தார். முதலமைச்சரின் இரு கண்களில் ஒரு கண் சென்னை மாநகராட்சி. மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்கு 27 மற்றும் சுகாதாரத்திற்கு 19 அறிவிப்புகள் வெளியிட்டு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, சென்னை பள்ளிகளுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். சென்னை பள்ளிகள் தரத்தில் முதலிடத்தில் இருந்தது. அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில் அதைத் தொடராமல் தரத்தைக் குறைத்து விட்டனர். ஊழியர் பற்றக்குறையை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அதனையடுத்து, பேசிய மண்டலக்குழு தலைவர் தனியரசு, "இந்தியாவில் உள்ள மற்ற மாநகராட்சிக்கு எடுத்துக்காட்டாக சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் அமைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால், வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த ஆட்சியில் வருவாய் இழப்பு இருந்த நிலையில், பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் அவை சரி செய்யப்பட்டு ரு.850 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தான் ஆணையர், பொறியாளராக இருந்தார். அவருக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. மாமன்ற உறுப்பினர் நிதி 45 லட்சத்திலிருந்து அடுத்த ஆண்டு 75 லட்சமாக வழங்க வேண்டும். கத்திவாக்கம் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு 10 படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கத்திவாக்கம் அருகே பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் பகுதிகள் இருப்பதால் அதிகளவில் மக்கள் வருகின்றனர். அதனால் 50 படுக்கைகள் கொண்ட ஆரம்பச் சுகாதார மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும். திருவொற்றியூர் பட்டினத்தார் சந்தையைத் தரம் உயர்த்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதேபோல, மண்டலக்குழு தலைவர்கள் சரிதா, சாந்தகுமாரி, கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் உள்ளிட்டவர்கள் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசினர். மேலும் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி 45 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என மேயர் பிரியா அறிவித்தார்.

இதையும் படிங்க: ஒரு மாதக் காலத்திற்குள் 5,100 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.