ETV Bharat / state

நெசவாளர் வீட்டில் பட்டுச்சேலை நெய்தல்.. மாடு வண்டி ஊர்வலம் என அனல் பறக்கும் பிரச்சாரத்தில் பா.ம.க வேட்பாளர்! - Lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Ma Ka Stalin election campaign: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியில் நெசவாளர் வீட்டில் பட்டுச்சேலை நெய்து, மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்று என நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 5:34 PM IST

Updated : Apr 16, 2024, 6:32 PM IST

தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் நாளையுடன் முடிவு பெற உள்ள நிலையில், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டனர்.

கடந்த சில நாட்களாகவே, மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், இன்று கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியில் மாட்டு வண்டியில் பயணித்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து, பட்டு கைத்தறி நெசவாளர் ஒருவரின் இல்லத்தில், பட்டுச் சேலை நெசவு செய்து வாக்கு சேகரித்தார். மேலும், தான் நெசவாளர்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப் பாடுபடுவதாக உறுதியளித்தார். அதன் பின்னர் சாலையில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, பெண்கள் பலர் மலர்கள் தூவியும், ஆர்த்தி எடுத்தும் உற்சாக வரவேற்பை வழங்கினர்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மற்றும் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயண திருப்பதி உள்ளிட்டோர் ம.க.ஸ்டாலினுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டனர்.

அப்போது, கிரிக்கேட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் வாக்கு சேகரித்த போது, மயிலாடுதுறை வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் வி.கே.சிங் இணைந்து கிரிக்கெட் விளையாடினர். இந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இதையும் படிங்க: தொழிலாளர்களுடன் தொழிலாளராக மூட்டை தூக்கி வாக்கு சேகரித்த நீலகிரி நாதக வேட்பாளர்!

Last Updated : Apr 16, 2024, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.