மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் தலைமை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில், மயிலாடுதுறை போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில், மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், செம்பனார்கோவில் கலைமகள் கல்விக் குழுமத்தின் தாளாளர் கொடியரசு மற்றும் சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் வினோத், ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேரைக் கைது செய்து மயிலாடுதுறையில் உள்ள கிளைச் சிறையில் போலீசார் அடைத்தனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், கலைமகள் கல்விக் குழுமத்தின் தாளாளர் கொடியரசு ஆகியோரின் ஜாமீன் மனுவை கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் வினோத் ஆகிய இருவரின் ஜாமீன் மனுவை மயிலாடுதுறை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: ஈரோட்டில் சிக்கிய சிறுத்தை அந்தியூர் வனப்பகுதியில் விடுவிப்பு! - Andhiyur Forest