ETV Bharat / state

காவலரை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை! - Mayiladuthurai Police Murder Case - MAYILADUTHURAI POLICE MURDER CASE

Mayiladuthurai Head Constable Murder Case: 2012ஆம் ஆண்டு நடந்த காவலர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேருக்கு ஏககால ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆள்மாறாட்டம் செய்து நீதிமன்றத்தில் ஆஜரான 2 பேருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

Mayiladuthurai Head Constable Murder Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 11:23 AM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொப்பியம் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு 4 பேர் காரில் சாராயம் கடத்தி சென்றனர். அப்போது, நடமாடும் சோதனைச் சாவடி பிரிவைச் சேர்ந்த போலீசார், அந்த காரை வழி மறித்த போது சாராயம் கடத்தி வந்த கும்பல் காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இந்நிலையில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து காரை வழிமறித்த தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் மீது காரை ஏற்றியுள்ளனர்.

அதில், மார்பு எலும்புகள் உடைந்து படுகாயம் அடைந்த தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் இந்த கொலை வழக்குத் தொடர்பாக மீன்சுருட்டியைச் சேர்ந்த காரை ஓட்டிய கலைச்செல்வன்(54), சங்கர்(44), ராமமூர்த்தி(44), திருவிடைமருதூர் புளியம்பட்டியைச் சேர்ந்த கருணாகரன்(54) ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் சாராய விற்பனை செய்த கலைச்செல்வனையும், கருணாகரனையும் காப்பாற்றும் முயற்சியாக ஆள்மாறாட்டம் செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் செல்வம் மற்றும் செல்வகுமார் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, இவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது கண்டறியப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

அதில், 21 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவலரை கொலை செய்ததால் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் வாதிட்டார். அதனையடுத்து, குற்றவாளிகள் என்று நேற்று முன்தினம் தீர்ப்பளித்த நீதிபதி விஜயகுமாரி, நேற்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதங்களையும், எதிர்த்தரப்பு வழக்கறிஞர் வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு விபரங்களை வெளியிட்டார்.

அந்த தீர்ப்பில், கொலைக் குற்றம் சாட்டப்பட்ட முதல் 4 பேருக்கும் ஏககால ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டார். அபராதம் கட்டத் தவறினால், மேலும் 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆள்மாறாட்டம் செய்த செல்வம் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் திருச்சி மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: குடிபோதையில் நண்பர்களுக்குள் தகராறு..ஒருவரின் உயிரை பறித்த சோகம்..சடலத்துடன் உறவினர்கள் போராட்டம் - பரபரப்பு! - Sivaganga Youth Death Issue

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.