ETV Bharat / state

மயிலாடுதுறையில் மயான கொள்ளை.. கிழங்கை கொள்ளையிட்ட பக்தர்கள்!

Mayan Kollai: மயிலாடுதுறை மாவட்டம், முடிதிருச்சம்பள்ளியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற மயானக் கொள்ளை திருவிழாவின் கிழங்கு கொள்ளையிடும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபாடு செய்து கிழங்கை பெற்றுச் சென்றனர்.

மயிலாடுதுறையில் அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானக் கொள்ளை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 10:54 PM IST

மயிலாடுதுறையில் அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானக் கொள்ளை

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் நடைபெறும் மயானக் கொள்ளை திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயில் பரம்பரை அறங்காவலர் பிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், சுவாமிக்கு விசேஷ சந்தன அபிஷேக ஆராதனையும், சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கோயிலில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர், அங்காளம்மன் சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு (சுடுகாடு) மயானத்தை அடைந்தது. சுவாமி சென்ற போது வீதிகள்தோறும் பொதுமக்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, மயானக் கொள்ளையில் விரதம் இருந்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கிழங்கு வகைகள், நவதானிய வகைகள் வைக்கப்பட்டிருந்தன. சுவாமி தீபாராதனைக்குப் பிறகு, பேச்சாயி வேடமணிந்திருந்த பக்தர்கள், சிறுவர்கள் கிழங்கை கொள்ளையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கிழங்கை பக்தர்கள் உண்பதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், நோய்கள் அனைத்தும் தீரும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு, கிழங்கு வகைகளை எடுத்துச் சென்று, கோயிலில் அம்மனை தரிசித்து கிழங்கை உண்டு வழிபாடு செய்தனர். இந்த திருவிழாவுக்கான பாதுகாப்புப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா நேரில் வந்து பார்வையிட்டார். ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: “கூட்டணி தர்மத்திற்கு எதிரானது”.. மயிலாடுதுறை திமுக பிரமுகர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.