ETV Bharat / state

புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட மெரினா நீச்சல் குளம்.. கட்டணம் எவ்வளவு? - MARINA SWIMMING POOL

புதுப்பிக்கப்பட்ட சென்னை மெரினா நீச்சல் குளத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்தும் தொடங்கி வைத்தார்.

நீச்சல் குளத்தை துவங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
நீச்சல் குளத்தை துவங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 10:56 PM IST

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நீச்சல் குளம் சுமார் 1 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் கே.என் நேரு, சேகர்பாபு, மா.சுப்ரமணியன், தயாநிதி மாறன் எம்பி, மாநகராட்சியின் மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ், சென்னை மாநகராட்சியின் ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தில் குளிக்க ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான QR Code ஐ யும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார். சென்னை மெரினா கடற்கரையில் 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது மெரினா நீச்சல் குளம் உருவாக்கப்பட்டது.

மெரினா நீச்சல் குளம்: 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை மாநகராட்சி இடம் இந்த நீச்சல் குளம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 77 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மெரினா நீச்சல் குளம் செயல்பட்டு வருகிறது.
தனியார் பராமரிப்பில் விடப்பட்ட இந்த நீச்சல் குளம் தற்பொழுது ஒரு கோடியை 37 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு சென்னை மாநகராட்சியால் நேரடியாக பராமரித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தில் நடைபாதையை சீரமைத்து வர்ணம் பூசுதல், நடைபாதையில் புதிய கற்கள் மற்றும் ஓடுகள் பதித்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளும். பார்வையாளர்கள் அமரும் இடத்தில் மேற்கூரை அமைத்தல், குளத்தைச் சுற்றியுள்ள சுவரில் வண்ண ஓவியம் வரைந்து அழகுபடுத்துதல், ஒப்பனை அறை, குளியலறை, உடைமாற்றும் அறைகளை பழுது பார்த்து மேம்படுத்துதல் போதிய மின்விளக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரூ.5000க்கு மேல் கரண்ட் பில் வருதா? - இனிமேல் இப்படி தான் பில் கட்டனும்!

நேரம்: மெரினா நீச்சல் குளம் 100 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இதில் குறைந்த அளவாக 3.5 அடியும் அதிகளவாக ஐந்து அடி உயரமும் கொண்டுள்ளது. இந்த நீச்சல் குளம் ஆனது காலை 5.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை செயல்படும் எனவும் காலை 8.30 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை பெண்களுக்கான நேரம் ஆகும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கட்டணம் எவ்வளவு? இந்த நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்தல் மற்றும் கட்டணம் செலுத்துவதற்காக க்யூ ஆர் கோடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரத்திற்கு பெரியவர்களுக்கு 50 ரூபாய் எனவும் இதனை ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு 10% சிறப்பு சலுகையாக 45 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு 30 ரூபாய் எனவும் ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு 10 சதவீதம் சிறப்பு சலுகையாக 25 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளம் பராமரிப்பு பணி காரணமாக வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று விடுமுறை விடப்படுகிறது.

மேலும் நீச்சல் குளத்தில் பத்து உயிர் பாதுகாவலர்கள், எட்டு தூய்மை பணியாளர்கள், 10 சுத்தம் செய்யும் பணியாளர்கள், இரண்டு கண்காணிப்பாளர்கள், ஆறு பாதுகாவலர்கள் இரண்டு எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர் என மொத்தம் 38 பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றிட நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல்குளம் ஐந்து மாதத்திற்கு பிறகு நாளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படிகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.