தூத்துக்குடி: இயக்குநர் மாரி செல்வராஜ் பிறந்து, வளர்ந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் நேற்று (நவ.28) மாலை 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமை வகித்தார். இதில் நாதக, அதிமுக, திமுக, விசிக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நபர்கள் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது, இயக்குநர் மாரி செல்வராஜின் சொந்த கிராமத்தில் நடந்த கதையை படமாகி எடுத்த வாழைப் படத்தின் சிவனைந்தான் கதாபாத்திரத்தில் நடித்த பொன்வேல் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார்.
இதையும் படிங்க: தவெக மாநாட்டுக்கு சென்றபோது பலியானவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்த விஜய்!
அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தவெக துண்டை அணிவித்து, கட்சியில் இணைத்துக் கொண்டார். மேலும் இந்த நிகழ்வின் போது புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், தவெகவில் இணைந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது அந்த படத்தின் கதாநாயகனாக நடித்த பொன்வேலுடன் அந்த ஊர் மக்கள் மற்றும் தவெகவினர் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இது குறித்து தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கூறுகையில், “2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி இந்த பயணத்தை தொடர்ந்திருகின்றோம். புளியங்குளம் கிராமத்திற்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றி தருவோம். 2026ல் கட்சி தலைவர் விஜய்யை அரியணையில் அமர வைப்போம். அதற்காக தான் தற்போது வாழை படத்தின் கதாநாயகன் தவெகவில் இணைந்திருக்கிறார்” என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்