- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை: தமிழ்நாட்டில் முதல் கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவராக இருந்த மன்சூர் அலிகான், கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசிக்காமல், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொண்டதால், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் மீது, நடிகர் மன்சூர் அலிகான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் அலுவலகத்தில் சீல், லெட்டர் பேடுகள், 70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை பொதுச் செயலாளர் கண்ணதாசன் திருடிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சீமான் அளித்த புகார்; நடிகை விஜயலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜராக மேலும் ஒரு அவகாசம்!