ETV Bharat / state

மீண்டும் ஒரு ஈழம்... காலியாகும் மாஞ்சோலை... கண்ணீரோடு விடைபெறும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்! - Manjolai Tea Estate - MANJOLAI TEA ESTATE

Manjolai Tea Estate: மாஞ்சோலை பகுதியில், 95 ஆண்டுகாலமாக வாழந்துவந்த மக்கள் தற்போது தாங்கள் வாழ்ந்த இடத்தைவிட்டு பிரிய மனமில்லாமல் செல்லும் காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்கிறது. இப்பகுதியை விட்டு பிரிந்து செல்லும் தொழிலாளர்களின் அடுத்தகட்ட வாழ்வாதாரம் எப்படி இருக்கும்? அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? என்பதை மாஞ்சோலை பகுதி மக்களே விவரிக்கும் செய்தி தொகுப்பு...

மாஞ்சோலை தேயிலை தோட்டம்
மாஞ்சோலை தேயிலை தோட்டம் (IMAGE CREDIT - ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 8:33 PM IST

திருநெல்வேலி: "பசுமை நிறைந்த நினைவுகளே...நாம் பிரிந்து செல்கின்றோம்" என தழுதழுத்த குரலில் 95 ஆண்டுகால வாழ்க்கைக்கும், ஐந்து தலைமுறையாக வாழ்ந்து வந்த இடத்திற்கும் பிரியாவிடை கொடுக்கின்றனர் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதி உற்பத்தியாகும் இடம், கண்ணை கவரும் அணைகள் என பல்வேறு பொக்கிஷங்கள் குவிந்து கிடக்கின்றன. அதில் ஒரு பொக்கிஷம் தான் மாஞ்சோலை வனப்பகுதி.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அளித்த பேட்டி (VIDEO CREDIT - ETV Bharat TamilNadu)

பிபிடிசி வசத்தில் இருந்த மாஞ்சோலை: பிபிடிசி மணிமுத்தாறு அணையிலிருந்து சுமார் 25 கிமீ தூரத்தில் 3500 அடி உயரத்தில் இந்த மாஞ்சோலை வனப்பகுதி அமைந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இந்த வனப்பகுதி சிங்கம்பட்டி ஜமீன்தார் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அப்போது மும்பையை சேர்ந்த தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் எனப்படும் பிபிடிசி (BBTC) தனியார் நிறுவனம் மாஞ்சோலையில் தேயிலை எஸ்டேட் அமைக்க திட்டமிட்டது.

இதற்காக அந்நிறுவனம் சிங்கம்பட்டி ஜமீனை அனுகியது. இதையடுத்து கடந்த 1929ம் ஆண்டு முதல் 2028 வரை 99 ஆண்டுகள் சுமார் 8,000 ஏக்கர் பரப்பளவுள்ள மாஞ்சோலை வனப்பகுதியை பிபிடிசி நிறுவனத்துக்கு ஜமீன் குத்தகைக்கு கொடுத்தார். இதையடுத்து கரடுமுரடாக இருந்த மாஞ்சோலை மலைப்பகுதியை சீராக்கி அங்கு பிபிடிசி நிறுவனம் தேயிலை பயிர்களை பயிரிட்டது. மாஞ்சோலை மட்டுமில்லாமல் அதற்கு மேல் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரவெட்டி என மொத்தம் ஐந்து இடங்களில் தேயிலை எஸ்டேட் அமைத்தது.

மேலும் எஸ்டேட் வேலைக்காக கேரளா, திருநெல்வேலி, மானூர், தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு அங்கேயே குடியிருப்புகளையும் பிபிடிசி நிர்வாகம் கட்டி கொடுத்தது. மாஞ்சோலையில் ஆண்டுக்கு ஆறு மாதம் மழைப்பொழியும் மீதம் ஆறு மாதம் மிதமான வெயில் பதிவாகும். ஆனால், ஆண்டு முழுவதும் இங்கு குளிர் காணப்படும்.

இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான மலைப்பகுதியாகவும் பனிப்பொழியும் இயற்கை சூழலுக்கு நடுவே அமைந்துள்ள மலைப்பகுதியாக இருப்பதால் தொழிலாளர்கள் எஸ்டேட் வேலையை நேசிக்க தொடங்கினர். இதனால் மாஞ்சோலையை விட்டு பிரிய மனமில்லாத தொழிலாளர்கள் தங்கள் சந்ததியினரையும் இங்கேயே வேலைக்கு அமர்த்தினர்.

தற்போது நாள் ஒன்றுக்கு 450 ரூபாய் கூலியாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. குறைவான சம்பளம் என்றாலும் சுத்தமான சுகாதாரமான சூழ்நிலை என்பதால் மனநிறைவோடு தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். சுமார் ஐந்து தலைமுறைகளாக தொழிலாளர்கள் மாஞ்சோலையில் வேலை பார்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் 3000க்கு மேற்பட்டோர் பணிபுரிந்த நிலையில் தற்போது 536 பேர் மட்டுமே எஸ்டேட்டில் பணிபுரிகின்றனர்.

முடிவுக்கு வரும் 95 ஆண்டு கால சகாப்தம்: இந்நிலையில் தான் தொழிலாளர்கள் தலையில் இடி விழுந்தாற்போல ஜமீனுடன் பிபிடிசி நிறுவனம் போட்டுகொண்ட குத்தகை காலம் முடியும் தருணம் நெருங்கியது. சுதந்திரத்துக்கு பிறகு ஜமீன் நில ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டதால் மாஞ்சோலை பகுதி அரசு வசம் செல்லும் சூழல் உருவானது. எனவே முன்கூட்டியே நிலத்தை கையகப்படுத்த அரசு முயன்ற நிலையில் பிபிடிசி நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தை நாடினர்.

இதையடுத்து குத்தகை காலம் முடியும் வரை பிபிடிசி நிறுவனம் மாஞ்சோலையில் தேயிலை தோட்டத்தை நடத்தவும், 2028ல் முறைப்படி அரசு நிலத்தை கையகப்படுத்தி கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், திருநெல்வேலி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் மாஞ்சோலை உள்ளதால் அதை காப்புக்காடாக அறிவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாட்கள் ஓடிய நிலையில் குத்தகை காலம் முடிய இன்னும் நான்கு ஆண்டுகள் இருந்தும் முன்கூட்டியே எஸ்டேட் தொழிலாளர்களை வெளியேற்ற பிபிடிசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பூர்வீகத்தை விட்டுச்செல்லும் நிலை: அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கியது. சுமார் 100 ஆண்டுகளாக வாழ்ந்த மண்ணை விட்டு பிரிய மனமில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கு கண்ணீரோடு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் நெஞ்சில் நீங்காத மலைப்பகுதி என்பதால் தொடர்ந்து இங்கேயே இருக்க எப்படியாவது ஒரு வழிப்பிறக்குமா என்ற ஏக்கத்தில் உள்ளனர். தமிழக அரசு இந்த எஸ்டேட்டை ஏற்று நடத்தினால் தொடர்ந்து இங்கு வாழலாம் என்பது தொழிலாளர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

ஆனால் அது அவ்வளவு எளிதில் சாத்தியமாகாது. ஏனென்றால், மாஞ்சோலையை காப்புக்காடாக (Reserve Forest) நீதிமன்றம் அறிவித்ததன் மூலம் தமிழக அரசு நேரடியாக எஸ்டேட்டை ஏற்று நடத்துவதில் சட்ட சிக்கல் உள்ளது.
எனவே தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுக்கான பணபலங்கள் உட்பட அனைத்து தேவைகளையும் வழங்கி அவர்களை கீழே வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பிபிடிசி நிர்வாகம் செய்து வருகிறது.

கேள்விக்குறியில் மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதாரம்: இதனால் மாஞ்சோலை செயல் திட்ட தொழிலாளர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். மாஞ்சோலை மக்களின் மனநிலை குறித்து அறிந்து கொள்வதற்காக ஈடிவி பாரத் சார்பில் அங்கே கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெரும்பாலான தொழிலாளர்கள் பேசும்போது, "தலைமுறை தலைமுறையாக இங்கே வசிக்கிறோம். எங்களுக்கு தேயிலை தோட்ட வேலையை தவிர பிற வேலை தெரியாது.

இந்த மலையை விட்டு கீழே சென்றால் எங்களுக்கு வாழ்வாதாரம் கிடையாது. குடியிருக்க வீடு இல்லாமல் பலர் உள்ளனர் எனவே அரசு தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் அல்லது நாங்கள் கீழே சென்று எங்கள் வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்ள வீடு, வேலை வாய்ப்பு போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்" என கண்ணீரோடு தெரிவித்தனர்.

மேலும் இந்த மலைப்பகுதியை பெற்ற தாயை போல பாதுகாத்து வருவதாகவும் திடீரென இங்கிருந்து வெளியேறுவதால் கண்ணீருடன் செல்கிறோம் என்றும் வேதனையோடு தங்கள் கருத்தை அவர்கள் பதிவு செய்தனர்.

அரசு கை கொடுக்குமா?: இதுகுறித்து அறிந்து கொள்வதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை ஈடிவி பாரத் சார்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, “தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்குவதில் ஏதேனும் சட்ட விதமீறல் இருந்தால் என்னை அணுகலாம் என ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.

ஆனால் அதுபோன்று விதிமுறைகள் இருப்பதாக எனக்கு எந்த ஒரு கோரிக்கையும் வரவில்லை. தமிழக அரசு தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு. இதுபற்றி நான் கூற முடியாது. நாங்கள் விசாரித்ததில் 99 பேருக்கு கீழே வீடு இல்லை என்பது தெரிகிறது. எனவே அவர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

விடைபெறும் மாஞ்சோலை மக்கள்: இதனிடையே, நிறுவனம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதை நேற்றோடு நிறுத்திய நிலையில், அப்பகுதி மக்கள் மாஞ்சோலையில் ஒன்றுகூடி தங்களது பல ஆண்டு கால பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்ததோடு "பசுமை நிறைந்த நினைவுகளே" பாடலை தழுதழுத்த குரலில் பாடி பிரியா விடை கொடுப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டனர்.

மூன்றாண்டுகள் கல்லூரியில் ஒன்றாக படித்துவிட்டு பிரிந்து செல்லும் நண்பர்களுக்கே அப்பிரிவு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தும் என்ற நிலையில், பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் வாழ்ந்துவிட்டு அங்கிருந்து மறு குடி அமர்விற்கு வேறு பகுதிக்கு செல்லும் மக்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே கண்ணில் நீர் கோர்க்கிறது.

அரசியல் பார்க்காமல் ஒருங்கிணைவோம்: இதனிடையே, மாஞ்சோலை விவகாரத்தில் அரசியல் பாராது அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி என தெரிவித்துள்ளார்.

"மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயமாக கையெழுத்து வாங்கி வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்த நிர்வாகத்திற்கான ஒப்பந்தம் முடிவடைகின்றதே தவிர இதை காரணம்காட்டி தொழிலாளர்களை வெளியேற்றுவது என்பது சரியல்ல. 20 முதல் 30 வருடம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் தருவதாக கூறிவிட்டு இப்போது 25 சதவீதம் மட்டுமே முதலில் கொடுப்பதாக சொல்லி மோசடி செய்து இருக்கின்றனர்" என்று அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆட்டோமேட்டிக்கா அபிஷேகம்.. இந்துக்களின் வழிபாட்டிற்காக இஸ்லாமியரின் அசத்தல் கண்டுபிடிப்பு! - Invention Of Censor Devotional Kit

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.