சென்னை: வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி யாருக்கு ஆதரவளிப்பது என்று கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி சென்னையில் கூடிய கட்சியின் பொதுக்குழுவில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மார்ச் 9ஆம் தேதி நடைபெற்ற தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தில், “தமிழக மக்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வீரியமாக பிரதிபலிக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியை ஆதரிப்பது” என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், இன்று (மார்ச் 16) சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை நிர்வாகக் குழுவினருடன் சென்று சந்தித்து, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் தலைவர் பஷீர் அஹமது, அவைத்தலைவர் சம்சுதீன் நாஸர் உமரி, துணைச் செயலாளர்கள் சைஃபுல்லாஹ், காயல் AR.சாகுல் ஹமீது, S.G.அப்சர் சையது, AS.தாரிக் முகமது, வில்லிவாக்கம் PM.சாகுல் ஹமீது, M.பகர்தீன், மண்ணிவாக்கம் யூசுப், மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க தலைவர் புளியந்தோப்பு அன்வர், மாநில துணைச் செயலாளர் முசாகனி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதீனம் விவகாரம்; பாஜக மாவட்டத் தலைவர் அகோரத்திற்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!