ETV Bharat / state

'மனைவி வேணும்' செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர்.. மதுரையில் பரபரப்பு..! - madurai man suicide attempt

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 12:45 PM IST

Husband suicide attempt in Madurai: மதுரையில் தனது மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற முன்னாள் போக்குவரத்து கழக ஊழியரை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத்துறை மீட்டனர்.

தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு
தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு (credit - ETV Bharat Tamil Nadu)

மதுரை: மதுரை கோசாகுளம் அழகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த முருகன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியில் இருந்ததாகவும் பணியின் போது அவ்வப்போது மது அருந்தி வந்த நிலையில் பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது மனைவி மற்றும் தாயாருடன் கோசா குளம் பகுதியில் குடியிருந்து வந்த இவர், அவ்வப்போது குடித்துவிட்டு வீட்டில் மனைவியோடு சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு மனைவி அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்த முருகன் தனது வீட்டின் அருகே உள்ள செல்போன் டவர் மீது நேற்று மாலை ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்நிலையில், செல்போன் டவர் மீது மர்ம நபர் ஒருவர் ஏறுவதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததனர். இதன் அடிப்படையில் கூடல் புதூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் குழு மற்றும் தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் என அனைவரும் விரைந்து சென்று டவர் மீதேறி நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆனந்த முருகனை உயிருடன் மீட்டனர்.

மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்ற நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான நபர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை தடுப்பு உதவி எண்: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

இதையும் படிங்க: 'ப்ரொபஷனல் கில்லர்ஸ்'.. யார் இந்த கூலிப்படையினர்? எப்படி உருவாகிறார்கள்? விவரிக்கும் வழக்கறிஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.