ETV Bharat / state

மாமியாரை நடுரோட்டில் கொலை செய்த மருமகன்.. தஞ்சை அருகே பயங்கரம்! - Mother in Law killed in Thanjavur - MOTHER IN LAW KILLED IN THANJAVUR

Mother-in-law killed in family dispute: தஞ்சை அதிராம்பட்டினத்தில் குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் மாமியார் தாக்கப்பட்டதில், மாமியார் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 4:23 PM IST

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மன்னப்பன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார் (33). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா (30) என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த வீரக்குமாருக்கும், அவரது மனைவி ரஞ்சிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் இவர்களுக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில், ரஞ்சிதா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பகுதியில் ரஞ்சிதாவும், அவருடைய தாயார் சாந்தி என்பவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வீரக்குமாருக்கும், அவரது மனைவி ரஞ்சிதா மற்றும் மாமியார் சாந்தி ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வீரக்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது மனைவி ரஞ்சிதா மற்றும் மாமியார் சாந்தியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ரஞ்சிதா மற்றும் சாந்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சாந்தி உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த ரஞ்சிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீரக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற பாஜக வர்த்தக அணி நிர்வாகி.. சென்னையில் ஆட்களை வைத்து வர்த்தகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.