ETV Bharat / state

மகளுக்கு பைக் பரிசளிப்பதாக சென்னையில் பைக் திருடிய நபர்..போலீசாரிடம் சிக்கியது எப்படி? - Bike Theft case in Chennai - BIKE THEFT CASE IN CHENNAI

Bike Theft case in Chennai: மகளுக்கு பிறந்தநாள் பரிசளிப்பதாக கூறிவிட்டு, புதிய இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவரை போலீசார் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 11:35 AM IST

சென்னை: போரூர், ஆற்காடு சாலையை சேர்ந்தவர் அலெக்சாண்டர்(41). இவர் அதே பகுதியில் புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார். கடந்த தினங்களுக்கு முன்பு ஷோரூமிற்கு வந்த நபர் ஒருவர் தனது மகளின் பிறந்த நாளுக்கு பரிசாக புதிய இருசக்கர வாகனம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஆனால், புதிய வாகனங்களுக்கான முன்பதிவு திட்டம் முடிவடைந்ததாக கூறப்பட்ட நிலையில், வீட்டிற்கு தங்களது ஊழியரை அனுப்பினால் வேண்டிய ஆவணங்கள் மற்றும் இதற்கான தொகையை தருவதாக அந்நபர் தெரிவித்துள்ளார். பின்னர், அந்நபரிடம் புதியதாக இருசக்கர வாகனம் ஒன்றையும், தங்களது ஊழியர் ஒருவரையும் அந்நபருடன் அனுப்பியுள்ளனர்.

இதைதொடர்ந்து வளசரவாக்கம் பகுதிக்கு சென்றவுடன் வீடு வந்துவிட்டதாகவும், கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதை நம்பிய ஊழியர் கீழே இறங்கியதும், அங்கிருந்த புதிய இருசக்கர வாகனத்தோடு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதையறிந்தது அதிர்ச்சியடைந்த ஊழியர், செய்வதறியாமல் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதனடிப்படையில், ஷோரூமில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் அவரை வலைவீசித் தேடிவந்தனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றவர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார்(43) என்பது தெரியவந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இவர், நகைக்கடைக்காரரை திசைத் திருப்பிவிட்டு 5 பவுன் நகையை திருடிய சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த புதிய இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்! உடலுக்கு ஆட்சியர் நேரில் அஞ்சலி - Organs Donate

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.