ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் அமைந்துள்ளது செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு 6 முதல் 12ஆம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மலேசியா நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எம்.கே டிரான் குரூப் ஆஃப் கம்பெனியின் நிறுவனர்களான முத்துக்குமார் மற்றும் அனிதா ஆகிய இருவரும், தங்களது ஆயர்பாடி அறக்கட்டளை சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.30 லட்சம் செலவிலும், முதுவை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.8.5 லட்சம் செலவிலும் இலவசமாக வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டிடம் வழங்கி உள்ளனர்.
இதற்கான திறப்புவிழா, அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வளாகத்தில் இன்று (பிப்.10) நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை அறங்காவலர் பிரேமலதா மேற்கொண்டார். இதில் தலைமை ஆசிரியர் அகமது பைசல் வரவேற்புரையாற்றினார். இதனை தொடர்து ஆயர்பாடி அறக்கட்டளையின் நிறுவனர்களான டத்தோ முத்துக்குமார் மற்றும் அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்டிடங்களைத் திறந்து வைத்தனர்.
பின்னர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் முதலிடம் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தருமபுரியில் கூலி வேலைக்குச் சென்ற பட்டியலினப் பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் - இருவர் கைது!