ETV Bharat / state

நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு.. என்னனு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க.. வேலைக்கார பெண் கைது! - actress athulya ravi

athulya ravi house theft: நடிகை அதுல்யா ரவியின் வீட்டில் பணம் மற்றும் பாஸ்போர்ட் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதுல்யா ரவி(கோப்புப் படம்)
அதுல்யா ரவி(கோப்புப் படம்) (Credits - athulya ravi instagram)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 2:45 PM IST

கோயம்புத்தூர்: திரைப்பட நடிகையான அதுல்யா ரவி கோவையை சேர்ந்தவர். இவர் வடவள்ளி அருகே தனது தாய் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் திருடு போயுள்ளது. அதுல்யா ரவியின் தாய் விஜயலட்சுமி, வீடு முழுவதும் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

பின்னர் இது குறித்து விஜயலட்சுமி புகார் அளித்ததை தொடர்ந்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டது யார் என விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர், அதுல்யாரவி வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வி (46) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி (40) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,500 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் பாஸ்போர்ட் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் ஒரே இரவில் 7 இடங்களில் செல்போன் பறிப்பு; அச்சத்தில் மக்கள்.. போலீசார் ஆக்‌ஷன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.