ETV Bharat / state

"மின் கட்டண உயர்வால் ஜவுளித் தொழில் பாதிப்பு.. அரசு என்ன செய்கிறது?"- சிபி ராதாகிருஷ்ணன் கேள்வி! - CP Radhakrishnan

Maharashtra Governor C.P. Radhakrishnan: தமிழக அரசு தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்துவதால் ஜவுளி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இதை தவிர்க்க மாநில அரசு ஐவுளி துறையை சார்ந்தவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

சி.பி. ராதாகிருஷ்ணன்
சி.பி. ராதாகிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 7:08 AM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “வங்காளதேச நாட்டுடன் நீண்ட நெடிய உறவு நமக்கு இருந்தது. மதவாத சக்திகளின் கை ஓங்கும் போதெல்லாம் நம்முடைய உறவுக்கும், நெருக்கத்துக்கும் சவால் வருகிறது. இதை எதிர் கொள்ளும் நிலையில் இருக்கின்றோம்.

சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

உலக அமைதிக்கு வங்காளதேசம், இந்திய உறவு மிக முக்கியமானது. நிச்சயமாக மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. தமிழக அரசு தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்துவதால் ஜவுளி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் போட்டிகளை சமாளிக்க முடியாது. நிறைய உதவிகளை மாநில அரசு செய்ய வேண்டும். உலகம் முழுவதும் ஜவுளித்தொழில் வளர்ந்து வருகின்றது.

வங்காள தேசத்தில் இருந்து வியட்நாம் வரை இன்றைக்கு ஜவுளி தொழில் பிரமாண்டமாக இருந்து வருகிறது. பர்மாவில் கூட ஜவுளித் தொழில் புதிய எழுச்சியை பெற்றுள்ளது.இந்தச் சூழலில் நம் பகுதியை விட்டு இந்த தொழில்கள் வேறு நாட்டிற்கோ, வேறு மாநிலத்திற்கோ சென்று விடக்கூடாது. இதை தவிர்க்க மாநில அரசு ஐவுளி துறை சார்ந்தவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்க்க வேண்டும். கஞ்சா நடமாட்டமென்றால் கஞ்சா அதிகமாகிவிட்டது என பொருள் கொள்ளக்கூடாது.

அதிக நடமாட்டத்தில் இருக்கும் கஞ்சாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தான் இதை பார்க்க வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கஞ்சாவையும், இதர போதைப் பொருள்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வரவேற்கிறேன். அனைவரும் இதை வரவேற்க வேண்டும். முன்னாள் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் இல்லத்தில் எந்த அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என தெரியவில்லை. ஆனால் அவர் மீது எந்த குற்றசாட்டும் சுமத்தப்பட்டதாக தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பத்து ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்து உயிரிழந்த சிறுவன்; அமைச்சர் விடுத்த எச்சரிக்கை! - boy dies on 10 rupees juice

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.