ETV Bharat / state

மகா சிவராத்திரி 2024; தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு புஜை! - தஞ்சை பெரிய கோயில் சிறப்பு பூஜை

Thanjavur Big Temple: மகா சிவராத்திரியையொட்டி, தஞ்சை பெரிய கோயிலில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 4:22 PM IST

மகா சிவராத்திரி 2024: தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு புஜை.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படுவது, அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம். உலகப் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறும்.

அதேபோல், இந்த ஆண்டும் மகா சிவராத்தி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷம் என இரண்டுமே ஒரே நாளில் வந்ததால், கடந்த சில தினங்களாக தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில், நேற்று (மார்ச் 8) மகா சிவராத்திரி என்பதால், இரவு தொடங்கி அதிகாலை வரை பெருவுடையாருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன், கனி வகைகள் மற்றும் சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் 4 கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த நிகழ்வில், தஞ்சை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பிரதோஷம் என்பதால், பெரிய கோயிலில் வீற்றிருக்கும் மகாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கள்ளப்பெரம்பூர் பிரகன்நாயகி அம்பிகா சமேத கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதையும் படிங்க: "பிடித்திருந்தால் சேருங்கள்".. தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான இணைய முகவரி அறிமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.