ETV Bharat / state

பழனி கோயில் கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு!

Palani Murugan Temple: பழனி முருகன் கோயிலில் கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றாத இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், கிரிவல பாதையில் பக்தர்கள் வசதிக்காக மின்சார வாகன வசதி ஏற்படுத்தத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

madurai-high-court-has-issued-various-orders-in-contempt-petition-palani-murugan-temple-giriwala-path
பழனி கோயில் கிரிவலப் பாதையில் மின்சார வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மதுரை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 8:30 PM IST

மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

கிரிவலப் பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகள் காரணமாக பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனு செய்திருந்தார்.

இந்த வழக்கை முன்னர் விசாரணை செய்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், பழனி கோயில் நிர்வாகம் சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கோயில் கிரிவலப் பாதையில் வாகனங்கள் உள்ளே செல்வதைத் தடுக்கும் வகையில் 9 இடங்களில் இரும்பு தூண்கள் மற்றும் தள்ளும் வகையிலான தடுப்புகள் அமைக்கும் பணி 2 வாரங்களில் முடிவடையும்.

அதிகாரிகளின் வாகனங்கள் கொடைக்கானல் சாலை வழியாகக் கோயிலுக்குச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், முறையாக சர்வே செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அகற்றப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாத அளவிற்கு நிரந்தர தீர்வுகள் ஏற்படுத்த வேண்டும். மேலும், திருப்பதியைப் போலப் பக்தர்களை அழைத்துச் செல்ல கிரிவலப் பாதையில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவரை தற்காலிகமாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குப் பேருந்துகள் ஏற்பாடு செய்ய வேண்டும். எந்த விதமான தனியார் வாகனங்களும் கிரிவலப் பாதையில் வர அனுமதிக்கக் கூடாது. கிரிவலப் பாதையில் உரிய முறையில் சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இனிவரும் காலங்களில் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு செய்யாத அளவிற்குச் சம்மந்தப்பட்ட அரசுத்துறைகள் நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறிய ஆக்கிரமிப்புகளைக் கண்டறியும் வகையில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். ஆக்கிரமிப்புகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். என உத்தரவிட்டனர்.

மேலும் மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவுகள் குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்துவைத்தனர்.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோட் செய்வது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.