ETV Bharat / state

தனிநபர் உரிமையை மீறும் ஆவணங்கள் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன? - MADURAI HC BENCH ORDER

தனிநபா் உரிமையை மீறி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அவற்றை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

high court bench madurai
உயர்நீதிமன்ற மதுரை கிளை (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 3:11 PM IST

மதுரை: திருமணம் என்பது ஒருவரையொருவா் நம்ப வேண்டும். ஒருவரது தனி உரிமையில் மற்றவர் தலையிடுவது முறையாக இருக்காது எனவும் அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க வல்லுநர்களை 3 மாதங்களில் நியமிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தனிநபர் உரிமையை மீறி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அவற்றை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 2003-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், எனது கணவர் விவாகரத்துக் கோரி பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் எனது கைப்பேசியில் நான் யாரிடமெல்லாம் பேசினேன் என்ற ஆவணத்தை நீதிமன்றத்தில் அவர் ஒப்படைத்தார். இந்த ஆவணத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என விசாரணை நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

தனியுரிமை மீறலை அனுமதிக்க முடியாது!

court order hammer representative image
கோப்புப் படம் (ETV Bharat)

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "இந்த வழக்கில் மனைவி பயன்படுத்திய கைப்பேசி ஆவணங்களை பெற சம்பந்தப்பட்ட கைப்பேசி நிறுவனத்துக்கு இணையதளம் மூலம் கணவர் வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்போது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் எண் (ஓடிபி) வரும். இதைப் பயன்படுத்தி ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

ஆனால், இந்த வழக்கில் மனைவிக்குத் தெரியாமல் அவரது கைப்பேசியை எடுத்து ஓடிபி எண்ணைப் பெற்று ஆவணங்களை கணவர் பதிவிறக்கம் செய்துள்ளார். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. திருமணம் என்பது ஒருவரையொருவர் நம்ப வேண்டும். ஒருவரது தனி உரிமையில் மற்றவர் தலையிடுவது முறையாக இருக்காது. தனது குறிப்பேட்டை (டைரியை) கணவர் பாா்க்கக் கூடாது என மனைவி நினைப்பதும் சரியே. எனவே, இது கைப்பேசிக்கும் பொருந்தும்.

விசாரணை நீதிமன்றங்கள் கவனத்திற்கு

ஒருவரின் தனி உரிமையை மீறி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த வழக்கில் மனைவியின் மனுவைத் தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாரதிய சாக்சிய ஆதினிய சட்டப்படியும், தகவல் தொழில்நுட்ப சட்டப்படியும் மின்னணு தொடா்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது வல்லுநர் சான்றளிக்க வேண்டும். இந்தச் சட்டம், கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது.

ஆனால், தமிழ்நாட்டில் இந்த வல்லுநர்கள் எந்த மாவட்டத்திலும் நியமிக்கப்படவில்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடர்பான ஆவணங்களை ஆய்வுசெய்து சான்றளிக்க வல்லுநர்களை மூன்று மாதங்களில் நியமிக்க ஒன்றிய தொழில்நுட்ப அமைச்சகச் செயலர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

ETV Bharat Tamil Nadu
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.