ETV Bharat / state

ஒரே நபருக்கு 8 மணி நேரத்தில் 3 சிக்கலான அறுவை சிகிச்சை.. மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை! - Madurai Government Rajaji Hospital - MADURAI GOVERNMENT RAJAJI HOSPITAL

Madurai GH: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் 63 வயது முதியவருக்கு கழுத்துப்பகுதியில் பைபாஸ் அறுவை சிகிச்சை, இருதய ஸ்டென்ட் சிகிச்சை, மகாதமனி வீக்கத்திற்கான அறுவை சிகிச்சை ஆகிய மூன்று அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்
மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 12:52 PM IST

மதுரை: பேரையூர் மல்லப்புரத்தை சேர்ந்த 63 வயது முதியவரான சேகர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் முதியவரின் மகன் அன்பரசன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேகரை அனுமதித்துள்ளார். அவருக்கு இருதய பாதிப்புடன், இரத்தக்குழாயில் ஓட்டை மற்றும் இரத்தக்குழாய் தமனி வீக்கம் உள்ளிட்டவை இருப்பது கண்டறியப்பட்டது.

மருத்துவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனையடுத்து சேகருக்கு அறுவை சிகிச்சை செய்ய 20 லட்ச ரூபாய் செலவாகும் எனவும், அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும் அவர் உயிருடன் இருப்பதற்கான உத்தரவாதம் தர முடியாது என தனியார் மருத்துவமனை கைவிரித்து விட்டது. உடனடியாக அன்பரசன் தனது தந்தையை மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கு இருதய நெஞ்சக அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்த நிலையில், இரத்தக்குழாய் வீக்கம் கழுத்து வரை வளர்ந்ததோடு, இரத்தக்குழாய் அடைப்பு மற்றும் ஸ்டென்டு பொருத்தும் அவசியமும் எழுந்தது. இதனையடுத்து நேற்று இருதய அறுவை சிகிச்சை குழு, மயக்க மருந்தவியல் குழு இணைந்து கழுத்துப்பகுதியில் பைபாஸ் அறுவை சிகிச்சை, இருதய ஸ்டென்ட் சிகிச்சை, மகாதமனி வீக்கத்திற்கான அறுவை சிகிச்சை ஆகிய மூன்று அறுவை சிகிச்சைகளையும் ஓரே முறையில் 8 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களின் தீவிர முயற்சியால் தற்போது சேகர் நலமுடன் இருக்கிறார். இந்த அறுவை சிகிச்சை மூலம் அரசு மருத்துவமனை, மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். இந்த சிக்கலான அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட அனைத்து மருத்துவர்களையும் மருத்துவமனை முதல்வர் தர்மராஜ் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: "தமிழீழம் அமைக்க மோடி உதவ வேண்டும்" - மதுரை ஆதீனம் தடாலடி பேட்டி! - Madurai Adheenam Demand to modi

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.