ETV Bharat / state

ரயில் படிக்கட்டு பயணம்; ஒருவர் தவறி விழுந்தால் மீட்க என்ன செய்வது? - Southern Railway

Avoid Footboard Travel in Train: மதுரை ரயில்வே கோட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 3:40 PM IST

ரயில் படியில் அமர்ந்து பயணம் செய்யும் கோப்புக்காட்சி
ரயில் படியில் அமர்ந்து பயணம் செய்யும் கோப்புக்காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை கோட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்த பயணிகளில் 8 பேர் பலியான நிலையில், 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். இந்த ஆண்டில் கடந்த ஆறு மாதங்களில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 17 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டு ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்து ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்து 41 பேர் உயிரிழந்ததுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர்.

ரயில் நிலையங்களில், 'படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாம்' என விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பொது அறிவிப்புகள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்த போதிலும், பயணிகள் படிக்கட்டுகளில் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் பயணம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்த விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவு முதல் அதிகாலை நேரங்களில் நடைபெறுகிறது.

படிக்கட்டில் பயணம் செய்யும் பயணிகள் தூக்கக் கலக்கத்தில் கீழே விழுவது அதிகரித்து வருகிறது. ரயில் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்பவர்களது கால்கள் ரயில் நிலைய நடைபாதைகளில் மோதியும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பெரும்பாலும் இளைஞர்களே பயணம்: படிக்கட்டு பயணத்தால் அதிகபட்சமாக விருதுநகர் - வாஞ்சி மணியாச்சி இடையே 66 பேரும், மதுரை - திண்டுக்கல் இடையே 44 பேரும், விருதுநகர் - செங்கோட்டை இடையே 43 பேரும் பாதிப்படைந்துள்ளனர். பெரும்பாலும், பாதிப்படைந்தவர்கள் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களாகவே உள்ளனர். பாதிப்படைந்தவர்களில் 87 சதவீதம் ஆண்களும் 13 சதவீதம் பெண்களும் உள்ளனர்.

படிக்கட்டு பயணத்தைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு படிக்கட்டில் பயணம் செய்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.10,100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.11,000 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் தவறி விழுந்தால் மீட்க என்ன செய்வது?: ரயிலில் பாதுகாப்பிற்காக பயணம் செய்யும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் படியில் நின்று கொண்டும், செல்ஃபோன் மூலம் படம் எடுத்துக் கொண்டும், மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருப்போர் மீதும் நடவடிக்கை எடுத்து ரயில் பெட்டி கதவுகள் மூடப்பட்டிருக்கும் நிலையை உறுதி செய்கிறார்கள். ரயில் பாதையில் உள்ள மின்மய மின்சார கம்பத்தில் தூரம் கணக்கிடும் வகையில் எண்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, மதுரைக்கும் சென்னைக்கும் இடையே 493 கிலோ மீட்டர் என்று குறிப்பிடும் வகையில் சோழவந்தானுக்கு பிறகு ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் 471/000, 471/100, 471/200.. எனத் தொடர்ச்சியாக குறிப்பிடப்பட்டிருக்கும். தவறுதலாக யாராவது ரயிலிலிருந்து விழுந்துவிட்டால் அதன் அருகில் உள்ள மின்சார கம்பத்தில் எழுதப்பட்டிருக்கும் எண்ணைக் குறிப்பிட்டு "ரயில் மதாத்" (Rail MADAD) செயலியில் புகார் செய்தால், பாதிக்கப்பட்டவரை விரைவில் மீட்டு காப்பாற்ற முடியும்" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஓசூரில் ஏடிஎம்-ஐ உடைத்து ரூ.14.5 லட்சம் கைவரிசை.. அரங்கேறும் தொடர் கொள்ளையால் திணறும் போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.