ETV Bharat / state

“இன்று நடைபெற்ற கொலைக்கும் சித்திரைத் திருவிழாவிற்கும் சம்பந்தமில்லை” - மதுரை மாநகர காவல்துறை விளக்கம்! - Madurai City Police - MADURAI CITY POLICE

Madurai Chithirai Thiruvizha: இன்று அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தின் அருகே நடைபெற்ற கொலை முன்பகை காரணமாக நிகழ்ந்தது எனவும், எனவே சித்திரைத் திருவிழாவிற்கும், இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மதுரை மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 9:09 PM IST

மதுரை: இன்று அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தின் அருகே நடைபெற்ற கொலை முன்பகை காரணமாக நிகழ்ந்தது எனவும், எனவே சித்திரைத் திருவிழாவிற்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்து மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுரை மாநகர் மதிச்சியம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் என்பவரின் மனைவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அக்கயர் சாமி மகன் சதீஸ் என்பவருக்கும் திருமணத்துக்கு மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக கார்த்திக் மற்றும் சதீஸ் இடையே முன் விரோதம் இருந்து வந்ததுள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டிருந்த சதீஸ், இன்று (ஏப்.23) அதிகாலை 0130 மணியளயவில், ஆழ்வார்புரத்தில் சோனை என்பவருடன் நின்று கொண்டிருந்த கார்த்திக் என்பவரிடம், முன் பகையை மனதில் வைத்து, அவரிடம் வாக்குவாதம் செய்த போது, சதீஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திக்கையும், அவருடன் நின்று கொண்டிருந்த சோனையையும் குத்தியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு அரசு இராஜாஜி மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

சிகிச்சையில் இருந்த சோனை என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது தொடர்பாக மதிச்சியம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றவாளியான சதீஸ் என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்.

இந்த கொலைக்கும் சித்திரைத் திருவிழாவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. இது முழுவதும் திருமணத்துக்கு மீறிய உறவு, முன்விரோதம் சம்பந்தமான இரு தனிப்பட்ட நபர்களிடையே உள்ள பிரச்னையாகும். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்படும் செய்தி தவறானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை சித்திரைத் திருவிழாவில் பட்டா கத்தியோடு இளைஞர்கள் மோதல்.. என்ன நடந்தது? - Youth Clash In Chithirai Thiruvizha

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.