ETV Bharat / state

மதுரையில் பாஜக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை! - BJP Person Murder

BJP Person Murder in Madurai: மதுரையில் அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாஜக மாவட்டச் செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சக்திவேல்
கொலை செய்யப்பட்ட சக்திவேல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 1:17 PM IST

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (35) என்பவர், மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்ட பாஜக ஓபிசி அணியின் மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும், அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று (பிப்.15) காலை 6 மணி அளவில் சக்திவேல் தனது வீட்டில் இருந்து, வண்டியூர் டோல்கேட் அருகே சங்கு நகர் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான குடோனுக்கு. தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற அடையாளம் தெரியாத 3க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் சக்திவேலை விரட்டியுள்ளனர். சக்திவேல் தப்பியோட முயன்ற நிலையில், மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த கூர்மையான ஆயுதங்களால் வெட்டி உள்ளனர்.

சக்திவேல் தப்பியோட முயன்ற நிலையிலும், விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சக்திவேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள், காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல் துறையினர், சக்திவேலின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அண்ணாநகர் காவல் துறையினர், சம்பவம் நடைபெற்ற இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சரக்கு வாகனம் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே சக்திவேலுடன் ஒரு நபர் பிரச்னையில் ஈடுபட்டு வந்து உள்ளது தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில், காவல் துறையினர் டோல்கேட் உள்ளிட்ட சம்பவம் நடைபெற்ற சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து, கொலையாளிகளைக் கைது செய்வதற்காக தனிப்படை காவலர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சக்திவேலின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில், காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே பாஜகவில் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த ஜெகன் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாகர்கோவிலில் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்து விட்டு விபத்து போல் நாடகமாடிய கும்பல்.. சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.