ETV Bharat / state

"லேப்டாப் திருட்டு வழக்கில் தலைமை ஆசிரியர்களை பலிகடா ஆக்குவது நியாயமற்றது" - உயர் நீதிமன்றம் அதிருப்தி! - govt school laptop theft case - GOVT SCHOOL LAPTOP THEFT CASE

TN Govt school laptop theft case: ஆசிரியர்களின் சேவையை வேறு எந்த சேவையோடும் யாரும் ஒப்பிட முடியாது எனவும், அரசுப் பள்ளி மடிக்கணினி திருட்டு வழக்கில் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பலிகடா ஆக்குவது நியாயமற்றது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்றம் புகைப்படம்
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 3:56 PM IST

மதுரை: தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி, மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி ஆகியோர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர். தங்களது பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரசு லேப்டாப்கள் திருடு போன வழக்கு நிலுவையில் உள்ளதால், இருவரையும் ஓய்வு பெற அரசு அனுமதிக்கவில்லை. மேலும் அவர்களுக்குரிய எந்தவித பணப்பலன்களும் கிடைக்கவில்லை.

இதனால் தங்களை ஓய்வு பெற அனுமதித்து, ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்குமாறு உத்தரவிடக் கோரி சசிகலா ராணி, கலைச்செல்வி இருவரும் தனித்தனியே உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, தஞ்சை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த மனுக்கள் இன்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் தரப்பில், “தமிழ்நாடு முழுவதும் இதுவரை 140 பள்ளிகளில் லேப்டாப் திருடு போனதாக புகார் கொடுக்கப்பட்டு காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தஞ்சாவூரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரையில் திருடிய நபர்கள் கண்டறியப்படவில்லை. எனினும் வழக்கு முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும், 59 தலைமையாசிரியர்கள் மீதான புகாரில் அவர்களே பணம் செலுத்தி உள்ளதாக” வாதிடப்பட்டது.

இதனைப் பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கணினி திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசு ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து வருகிறது.

ஆனால், மடிக்கணினி திருட்டு என்பது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இவற்றை செயல்படுத்துவதில் நீதிமன்றம் குறுக்கிடாது.

பெரும்பாலான பள்ளிகள் பாதுகாப்பான நிலையில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தலைமையாசிரியர்களுக்கு சில நிர்வாக பொறுப்புகள் இருந்தாலும், அவர்களின் முதன்மை கடமை மாணவர்களுக்கு ஆசிரியராக கற்பிப்பதுதான். ஆசிரியர்களின் சேவையை வேறு எந்த சேவையோடும் யாரும் ஒப்பிட முடியாது.

அவ்வாறு இருக்கும் போது மடிக்கணினி திருட்டு வழக்கில் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பலிகடா ஆக்குவது நியாயமற்றது. மடிக்கணினி திருடு போன விவகாரத்தில் காவல் நிலையத்தில் அவர்களே புகார் அளிப்பது, வழக்கை தொடர்ந்து கண்காணிப்பது போன்ற பணிகளால், ஏழை மாணவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை சாதாரண மனிதர்களைப் போல கல்வித்துறை நடத்துவதை ஏற்க முடியாது, இது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, போலீசாரின் பாதுகாப்பில் மடிக்கணினிகளை வைத்து மாணவர்களிடம் ஒப்படைக்கலாம்.

இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்த காவல்துறைக்கு அரசு அறிவுறுத்த வேண்டும். எனவே, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை பள்ளி நிர்வாகத்துடன் தொடர்பு இல்லாத பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்திற்காக விரிவான நடைமுறை, வழிமுறைகளை மாநில அரசு வகுக்க வேண்டும். மடிக்கணினி திருட்டு வழக்கை நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி விசாரிப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும், மனுதாரர்களை ஓய்வு பெற அனுமதித்து, அவர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: டான் டீ நிர்வாகம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலுமா? - நீதிமன்றம் கேள்வி! - TN Manjolai issue

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.