ETV Bharat / state

அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு; வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு! - threw slipper on minister car - THREW SLIPPER ON MINISTER CAR

Case of threw slipper on minister car: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தில் செருப்பு வீசிய சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய பாஜகவினரின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

உயா்நீதிமன்ற மதுரைக்கிளை
உயா்நீதிமன்ற மதுரைக்கிளை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 2:49 PM IST

மதுரை: காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றிய மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 2022ஆம் ஆண்டில் பணியில் இருந்த போது இறந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக அப்போதைய மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமான நிலையம் வந்து, மரியாதை செலுத்தி விட்டு திரும்பும் போது பாஜகவினர் சிலர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசினர்.

இந்தச் சம்பவம் குறித்து 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்த நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜகவைச் சேர்ந்த வேங்கைமாறன், மணிகண்டன், தனலட்சுமி, மாணிக்கம் உள்ளிட்ட 12 பேர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகி, “தேசியக்கொடி பொருத்திய வாகனம் மீது செருப்பு வீசி சட்ட ஒழுங்கு பாதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். அதற்கான அனைத்து ஆவணங்களும் உள்ளன. எனவே, இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதனை அடுத்து, இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஒரு அமைச்சர் தனது வாகனத்தில் தேசியக்கொடியை பொருத்தி பயணிக்கும் போது, அவரது வாகனம் மீது செருப்பு வீச்சு சம்பவம் என்பது தேசியக்கொடியை அவமதிக்கும் செயலாகும்.

அது மட்டுமல்லாமல், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அமைச்சரை திட்டி கோஷம் எழுப்பி உள்ளார்கள். எனவே, இந்த வழக்கை சட்டப்படி விசாரணை நீதிமன்றத்தில் சந்திப்பதே சரியாக இருக்கும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார். வழக்கில் மனுதாரர்கள் விசாரணைக்கு ஆஜராக விலக்கு தர வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதி, அரசியலுக்கு வந்தால் தியாகம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறெல்லாம் விலக்கு அழிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: லாக்கப் மரண வழக்கு: இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசாருக்கு 7 ஆண்டு சிறை- வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு! - lockup murder case verdict

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.