சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மு.வெற்றிவேல் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு பங்குனி முதல் வாரம் பால் குடம் எடுத்து அபிஷேக , ஆராதனைகள் செய்து வருவது வழக்கம்.
திருவிழாவின் தொடர்ச்சியாக கொன்னைப்பட்டி கிராமத்தில் ஏறு தழுவுதல் நிகழ்ச்சியான மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டு வரப்படுகிறது. இந்த மஞ்சுவிரட்டு தமிழக அரசிதழில், 07.03.2019ம் தேதி வெளியிடப்பட்டு 2019, 2020ம் ஆண்டுகளில் மஞ்சு விரட்டு நடந்தது.
எனவே, கொன்னைக்கண்மாயில் இந்த ஆண்டும் 19.03.2024 ம் தேதி செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடத்துவது என ஊர் பொதுமக்கள் கூடி முடிவெடுத்துள்ளோம். ஆனால் அனுமதி வழங்க வில்லை. எனவே அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருஷ்ண குமார், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசு தரப்பில், இந்த கிராமம் பட்டியலில் இல்லை என கூறி உள்ளார். மனுதாரர் தரப்பில் பட்டியலில் உள்ளது என கூறுகிறார். எனவே, மனுதாரரின் மனுவைப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: யார் இந்த ஆர்.சச்சிதானந்தம்? திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இவர் செய்தது என்ன?