ETV Bharat / state

பூம்புகார் கப்பல் கழக வாடகை பாக்கி விவகாரம்; இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி! - Madurai Bench of Madras High Court

Madurai Bench of Madras High Court: பூம்புகார் கப்பல் கழக வாடகை பாக்கி தொடர்பான வழக்கில், இந்து அறநிலையத்துறை ஆணையர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai Bench of Madras High Court
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 2:14 PM IST

மதுரை: திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம், பூம்புகார் கப்பல் கழகத்திற்கு கடந்த1984 ஆம் ஆண்டு வாடகைக்கு வழங்கப்பட்டது.

அந்த வகையில், வாடகை பாக்கியாக ரூ.3 கோடி தற்போது வரை செலுத்தப்படாமல் உள்ளது. எனவே, நிலுவைப் பாக்கியை உரிய வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர், பூம்புகார் கப்பல் கழக வாடகைப் பாக்கியை அதன் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரிடம் வசூலிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க, கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால் இதுவரை கப்பல் நிறுவனத்திடமிருந்து வாடகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராதாகிருஷ்ணன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று (பிப்.3) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்புராஜ், 80 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியைத் தருவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், உரிய கால அவகாசம் வழங்கும் பட்சத்தில்ம் வாடகை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அப்போது, வாடகை பாக்கியை வசூல் செய்ய அறநிலையத்துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன? 3 கோடி ரூபாய் வரை வாடகை பாக்கி வைக்கும் வரை அறநிலையத்துறை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்ததா, அறநிலையத்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் சாதாரண ஏழை, வியாபாரி இருந்து வாடகை செலுத்தாவிட்டால் அவர்களை ஆக்கிரமிப்பாளர் என வெளியேற்றுவதற்குத் தீவிரம் காட்டும் அதிகாரிகள், பூம்புகார் கப்பல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேட்டார்.

மேலும், நீதிமன்றம் உத்தரவிட்டும் வாடகை பாக்கியை வசூலிக்க அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கோயில் சொத்துக்களின் வருமானங்களை இப்படியே விட்டுவிடலாமா? தமிழகத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கள் வேலையைச் செய்கிறார்களா, இல்லையா?

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அரசு நல்ல ஊதியம்தானே வழங்குகிறது. குறைந்த ஊதியம் எதுவும் வழங்கவில்லையே, தங்களின் வழக்கமான பணிகளைக் கூட அறநிலையத்துறை அதிகாரிகள் செய்யாதது கஷ்டமாகத் தெரியவில்லையா? அதிகாரிகளின் செயல் மோசமாக உள்ளது.

அறநிலையத்துறை நிலத்தில் 10 லட்சம் ரூபாய் வரிப் பாக்கி வைக்கும் சாதாரண விவசாயி மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுவீர்களா? அரசிடம் ஊதியம் பெறும் அதிகாரிகள் யாருக்கு விசுவாசமாக உள்ளார்கள்? ஒரு தனிநபர் கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்து வாடகை வசூலிக்கக் கோரும் அக்கறை அதிகாரிகளுக்கு இல்லையா? என சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.

நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இந்த விவகாரத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: விஜயின் அரசியல் யாரை எதிர்க்கிறது? யாருடைய ஓட்டுக்கு வேட்டு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.