ETV Bharat / state

'ஸ்ரெஸ்தா' உதவித்தொகை தேர்வு; பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு! - Shrestha Scholarship Scheme

Shreshta Scholarship Scheme: பட்டியல் வகுப்பு மாணவர்களின் உயர்கல்வி படிப்பிற்காக 'ஸ்ரெஸ்தா' உதவித் தொகை திட்டத்திற்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கக் கோரிய வழக்கில், மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

high-court-madurai-bench-order-to-central-govt-response-to-shrestha-scholarship-scheme-exam-time-extend
பட்டியல் மாணவர்களுக்கான 'ஸ்ரெஸ்தா' உதவித் தொகை தேர்வு: பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு நீதிமன்றம் உத்தரவு..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 7:15 PM IST

மதுரை: மதுரையைச் சேர்ந்த கயல்விழி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ஆதிதிராவிடர் , பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களின் முன்னேற்றத்துக்காகவும், அவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் நோக்கத்திலும் ஒன்றிய அரசு 'ஸ்ரெஸ்தா' திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தியது.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் தகுதித் தேர்வை நடத்தி, மாணவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த திட்டத்தின்கீழ், என் மகன் தனது 9ஆம் வகுப்புக்கான தேர்வை 2022ஆம் ஆண்டில் எழுதி, தேசிய அளவில் 324வது இடத்தைப் பிடித்து, மத்திய அரசின் உதவித்தொகையைப் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், அவர் கடந்த மாதம் 11ஆம் தேதி தனது 10ஆம் வகுப்புத் தேர்வை எழுதி முடித்தார். இதனால் பிளஸ்-1 வகுப்புக்கான 'ஸ்ரெஸ்தா' உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தயாராக இருந்தோம். விசாரித்தபோது, வேறொரு இணையதள முகவரியில் கடந்த மார்ச் 12ஆம் தேதியே அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பிக்கும் தேதி முடிந்துவிட்டது என்பது தெரிந்தது. வருகிற 24ஆம் தேதி தேர்வு நடக்கும் என அறிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் மே மாதத்தில்தான் இந்த தேர்வு அறிவிப்பு வெளியாகும். வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே அறிவிப்பு வெளியிட்டது சட்டவிரோதம். இதனால் எங்களைப் போல ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, 'ஸ்ரெஸ்தா' கல்வித் திட்டத்திற்கான தகுதித்தேர்வு அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, மே மாதத்தில் வழக்கம் போல புதிதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: Lok Sabha Election 2024 First Phase; ஓய்கிறது பிரசாரம்.. தீர்ப்பெழுதப் போகும் மக்கள்! - LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.