ETV Bharat / state

பூம்பாறை மலை கிராமத்திற்குப் போக்குவரத்து வசதி வேண்டித் தொடரப்பட்ட வழக்கு; பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு! - transport facility to poombarai - TRANSPORT FACILITY TO POOMBARAI

Madurai High Court Bench: கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை மலை கிராமத்திற்குப் போக்குவரத்து வசதி வேண்டித் தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை (கோப்பு காட்சி)
உயர்நீதிமன்ற மதுரை கிளை (கோப்பு காட்சி) (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 7:23 PM IST

மதுரை: கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை மலை கிராமத்திற்கு போதிய போக்குவரத்து வசதி செய்து தர உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று (ஜூன் 3) விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பில் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கொடைக்கானல் பூம்பாறையைச் சேர்ந்த கோமதி தாக்கல் செய்த மனுவில், “கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை ஒரு மலை கிராமம். இந்த பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயில பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அருகில் உள்ள புலகவை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.

இந்த கிராமத்திற்குச் செல்லவும் பொது போக்குவரத்தையே நம்பி உள்ள நிலையில், போக்குவரத்து வசதி முறையாக செய்து தரப்படாததால், பெரும்பாலான மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் பாதியிலேயே படிப்பை கைவிடும் நிலை உள்ளது. காட்டு வழியே செல்லும் மாணவர்கள் வனவிலங்குகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளதோடு, சிலர் வாகனங்களில் தொற்றிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பூம்பாறை கிராமத்தில், இருந்து புலகவை கிராமத்திற்கு பொதுப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித்தர உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஒரு நாளைக்கு காலை முதல் மாலை வரை நான்கு முறை அரசு பேருந்து இயக்கப்படுகிறது”, என தெரிவித்தார். இதனையடுத்து அதை உறுதி செய்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்! - Kalakshetra Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.