ETV Bharat / state

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு! - install automatic doors in buses - INSTALL AUTOMATIC DOORS IN BUSES

Madurai High Court Bench: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் படிக்கட்டுகளில், எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டு உள்ளது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை
மதுரை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 7:25 PM IST

மதுரை: தமிழ்நாட்டில் பள்ளி நேரத்தைக் கணக்கில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற பொது வெளியில் பதிவான கோரிக்கையை, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து கடந்த 2013ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் இன்று (ஏப்.23) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கினாலும், இளைஞர்களின் படிக்கட்டு பயணமும், விபத்தும் குறையவில்லை.

ஓட்டுநர்களும், நடத்துநர்களும் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில், ஓட்டுநர்களும், நடத்துநர்களும் இளைஞர்களால் தாக்கும் காட்சிகள் அரங்கேறி வருகிறது. இளைஞர்கள் ஜாலியாக படிக்கட்டில் பயணம் செய்வது விபத்து ஏற்பட்டு இளைஞர்கள் உயிரிழக்கின்றனர்.

எனவே, இளைஞர்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில், அனைத்து பேருந்துகளிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளைப் பொருத்த வேண்டும். எனவே, படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் படிக்கட்டுகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டு உள்ளது, எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்படாமல் உள்ளது என்பது குறித்து தமிழ்நாடு உள்துறைச் செயலாளர், போக்குவரத்துத் துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'மண்டைக்கு சூரு ஏறுதே'.. சூது கவ்வும் 2 பாடல் வெளியானது! - Mandaikku Sooru Eruthey Song

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.