ETV Bharat / state

மதுரை ஆதீனம் நியமனம் தொடர்பான வழக்கு; நித்யானந்தாவின் சீராய்வு வழக்கு ஒத்திவைப்பு! - Nithyananda on Madurai Adheenam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 10:31 PM IST

Nithyananda on Madurai Adheenam: மதுரை ஆதீனம் நியமனம் தொடர்பாக நித்யானந்தா தாக்கல் செய்த சீராய்வு மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Nithyananda
நித்யானந்தா மற்றும் மதுரை ஆதீனம் (Credits - Kailaasa website and ETV Bharat Tamil Nadu)

மதுரை: மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, மதுரை ஆதீனத்தின் மறைவால் 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது மதுரை ஆதீனப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், நித்யானந்தா தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், கடந்த 2012ஆம் ஆண்டு தன்னை (நித்யானந்தாவை) மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார்.

இது கடும் சர்ச்சைகளைச் சந்தித்த நிலையில், 2019ஆம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் திரும்பப் பெற்றார். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 அன்று காலமானார்.

இதனையடுத்து, முறைப்படி அவருக்குப் பின் நான் தான் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்க வேண்டும். ஆனால், தற்போது எந்த வித ஒப்பந்தமோ, உயிலோ இல்லாமல், மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் மறைவுக்குப் பிறகு, 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது ஏற்புடையது அல்ல.

இந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு தன்னை (நித்யானந்தாவை) மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். பின்னர் மறுத்தார். இது தொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் மறைந்து விட்டார்.

இந்த நிலையில், மதுரை ஆதீனம் அருணகிரி நாதருக்குப் பதிலாக, 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் நியமனத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டு இந்த வழக்கில் சேர்த்துள்ளார். இது விதிமீறல். இந்த நிலையில், மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்குப் பதிலாக, 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை இந்த வழக்கில் மதுரை நீதிமன்றம் சேர்த்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மறு ஆய்வு வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து தற்போதைய மதுரை ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் தரப்பு வழக்கறிஞர்கள் விரிவான விவாதத்திற்கு கால அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு; பூசாரி கார்த்திக் முனுசாமிக்கு ஜாமீன் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.