ETV Bharat / state

மாஞ்சோலை தொழிலாளர்களின் அனைத்து வழக்குகளும் ஒத்திவைப்பு! - MANJOLAI ESTATE ISSUE CASE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 4:21 PM IST

Manjolai Estate Issue: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தாக்கல் செய்த வழக்கு இன்று மதுரை நீதிமன்ற அமர்வுக்கு வந்த நிலையில், அரசுத் தரப்பு விசாரணைக்காக கால அவகாசம் வேண்டியதால், மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாஞ்சோலை எஸ்டேட்( கோப்புப் படம்)
மாஞ்சோலை எஸ்டேட்( கோப்புப் படம்) (Credits- ETV Bharat Tamil Nadu)

மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வைகை ராஜன், பாபநாசம், சந்திரா ஆகியோர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில், "மாஞ்சோலை பகுதி மக்களை பார்ப்பதற்காகச் செல்லும் வழக்கறிஞர்களை அனுமதிப்பதில்லை" என தெரிவிக்கப்பட்டது. அதோடு வலுக்கட்டாயமாக ஓய்வு பெறும் ஆவணங்களில் கையெழுத்து பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பிபிடிசி நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "534 பேர் முன்கூட்டியே ஓய்வை ஏற்றுக் கொண்டுள்ளனர். அது சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது. ஏற்கனவே 25 சதவீதம் தொகை வழங்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள தொகை நாகர்கோவில் தொழிலாளர் நலத்துறையின் உதவி இயக்குநர் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது" எனக் கூறினர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது, அரசுத் தரப்பில் விசாரணைக்காக கால அவகாசம் கோரியதால், மாஞ்சோலை சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் வருகிற ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு விசாரணையை மாற்றி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மாஞ்சோலை விவகாரத்தை மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க சமூக ஆர்வலர் மீண்டும் மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.