ETV Bharat / state

“யூடியூப்பில் பணம் சம்பாதிப்பதற்காக வெறுப்பைத் தூண்டும் விதத்தில் பேச்சு” - சாட்டை துரைமுருகன் வழக்கில் நீதிமன்றம் கருத்து! - Sattai duraimurugan case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 10:19 PM IST

Sattai DuraiMurugan: கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை நாகரீகமான முறையில் தான் எதிர்கொள்ள வேண்டும் என கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

மதுரை: திருச்சி உய்ய கொண்டான் திருமலையைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நான் நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் இருந்து வருகிறேன். முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி குறித்து தேர்தல் கூட்டத்தில் பேசும்போது அவதூறான கருத்துக்களையும், பட்டியல் இன மக்களுக்கு எதிரான (SC/ ST) கருத்துக்களையும் தெரிவித்ததாக என் மீது திருச்சி மாவட்ட காவல்துறை வன்கொடுமைப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கிழமை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற வேண்டும் என்பதால், கீழமை நீதிமன்றத்தில் எனக்கு முன் ஜாமீன் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், “பட்டியல் இனத்தவருக்கு எதிராக பொது மேடையில் பேசிய சாட்டை துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் இதேபோல் பொதுவெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பேசி வருகிறார்.

ஏற்கனவே இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஜாமீன் பெறும்போது, இதுபோன்று அவதூறான கருத்துக்களை பேச மாட்டேன் என உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத பத்திரம் வழங்கி ஜாமீன் பெற்றுள்ளார். தற்போது உத்தரவாதப் பத்திரத்தை மீறி தொடர்ந்து பொதுவெளிகளிலும், பொது மேடைகளிலும் பட்டியலின மக்களுக்கு எதிராக பேசியுள்ளார். எனவே, இவருக்கு இந்த வழக்கில் நிவாரணம் வழங்கக் கூடாது” என கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, “மனுதாரர் ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றி அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் இது போன்ற கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதப் பத்திரமும் அளித்திருந்தார். அதனை ஏற்று நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது. இந்நிலையில், மனுதாரர் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டியல் இனத்தோருக்கு எதிரான கருத்துக்களைப் பேசி தனது யூடியூப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பில் உள்ளவர் இதுபோன்று பேசினால் மக்கள் மத்தியில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது கூட மனுதாரருக்கு தெரியாதா? கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை நாகரீகமான முறையில் தான் எதிர்கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரிய வகையில் பேசி யூடியூபில் பதிவேற்றம் செய்தால் அதற்கு பார்வையாளரும் கூடுகிறது, பணமும் குவிகிறது.

யூடியூப்பில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மக்களிடையே வெறுப்பைத் தூண்டும் விதமாக பதிவிட்டு உள்ளார். பேச்சு சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால், அதனை வரம்பு மீறி பயன்படுத்தக் கூடாது. அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. எனவே, மனுதாரர் இனிமேல் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என்றும், அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட மாட்டேன் என்றும் மீண்டும் நீதிமன்றத்தில் உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதி தெரிவித்தார்.

இதனை ஏற்று சாட்டை துரைமுருகன் தரப்பில் உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பட்டியல் இனத்தவருக்கு எதிராக பேசிய வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் மனுதாரர் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: "மதுரையில் என்னை கொல்ல முயன்ற போலீசார்..என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்" - சாட்டை துரைமுருகன் பகீர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.