ETV Bharat / state

போதைப்பொருள் கேட்டு கல்லூரி மாணவர் மீது தாக்குதல்.. கோவையில் நடந்தது என்ன? - Coimbatore Drugs issue - COIMBATORE DRUGS ISSUE

Coimbatore Drugs issue: கோயம்புத்தூரில் போதைப்பொருள் கேட்டு கல்லூரி மாணவரைத் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கரை போலீசார்
Coimbatore Drugs issue
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 3:37 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் போதைப்பொருள் கேட்டு கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் 4 பேர் தாக்கியுள்ள சம்பவம் குறித்து மதுக்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரனையில், தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (20) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த அருண்குமார் (20) ஆகியோர், கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் கல்லூரி விடுதி விடுமுறை என்பதால், மாச்சேகவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள அவரது நண்பரான ராஜகுரு என்பவரின் வாடகை அறையில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி முதல் இருவரும் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு அந்த அறைக்கு அடையாளம் தெரியாத சுமார் 20 வயது மதிப்புடைய நான்கு நபர்கள் வந்து போதப்பொருள் கேட்டுள்ளனர்.

அப்பொழுது அருண்குமார், தாங்கள் இந்த அறைக்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது என்று கூறியுள்ளார். இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், அருண்குமாரை அடையாளம் தெரியாத நான்கு நபர்கள், அங்கு இருந்த கிரிக்கெட் மட்டையால் தலையில் தாக்கியுள்ளனர். அப்பொழுது, அருகில் இருந்த ஆனந்த் மற்றும் ராஜகுரு ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் அறையை விட்டுச் சென்றதையடுத்து, ஆனந்த் மற்றும் ராஜ்குரு ஆகிய இருவரும் அறைக்குச் சென்று பார்த்த நிலையில், அருண்குமார் தலையில் ரத்தக் காயத்துடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையப் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில், மதுக்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம்..மாறாத அன்பு வச்ச மகராசி.. தீர்க்க சுமங்கலி வரம் தருவாள் மீனாட்சி..! - Meenakshi Thirukalyanam

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.