ETV Bharat / state

பத்திரப்பதிவை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கிய சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைத்தது உயர் நீதிமன்றம்! - Tamilnadu Deed Registration Act - TAMILNADU DEED REGISTRATION ACT

Tamil Nadu Registration Department Case: பத்திரப் பதிவுகளை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc-stayed-amendment-brought-in-tn-deed-registration-act-by-empowering-district-registrars-to-cancel-deed-registrations
பத்திரப்பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கி சட்டத்திருத்தத்தை நிறுத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்...
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 10:53 PM IST

சென்னை: மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு மேற்கொள்வது தடுக்க பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கி, கடந்த 2022ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது.

இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில், 2004ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்வது தொடர்பாக தென் சென்னை மாவட்ட பதிவாளர் பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து, காஸ்நவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்வது குறித்த விசாரணையை அனுமதித்தால், அது நில உரிமையாளர்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தத்தில் முன் தேதியிட்டு அமல்படுத்துவது தொடர்பாக, தெளிவற்ற நிலை உள்ளதாகவும், முன் தேதியிட்டு அமல்படுத்த அனுமதித்தால், லட்சக்கணக்கான பத்திரப்பதிவுகள் குறித்து விசாரணை நடத்த கோரிக்கைகள் வரும் எனத் தெரிவித்துள்ளார்.

சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட பத்திரப் பதிவுகள் குறித்து உரிமையியல் நீதிமன்றங்களில் மட்டுமே நிவாரணம் பெற முடியும் என தெளிவுபடுத்திய நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர் 2004ஆம் ஆண்டு மேற்கொண்ட பத்திரப் பதிவு குறித்து விசாரிக்க மாவட்டப் பதிவாளர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முன் தேதியிட்டு அமல்படுத்த அதிகாரம் வழங்க முடியாது என்பதால், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு ஏப்ரல் 4ஆம் தேதி அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: "நானாவது கல்லை காட்டுகிறேன், நீங்கள் பல்லை காட்டுகிறீர்கள்.." - ஈபிஎஸ்-க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி! - Udhayanidhi About EPS

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.