ETV Bharat / state

"அன்னிய செலாவணி மோசடி வழக்கின் குற்றப் பதிவில் சசிகலாவின் பெயர் மாற்றப்பட்டது ஏன்?" - உயர் நீதிமன்றம் கேள்வி! - FOREIGN EXCHANGE SCAM CASE

அன்னிய செலாவணி மோசடி வழக்கின் குற்றச்சாட்டு பதிவின்போது சசிகலாவின் பெயர் ஏன் மாற்றப்பட்டது என அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
சென்னை உயர் நீதிமன்றம், சசிகலா - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2024, 10:30 PM IST

சென்னை: தனியார் தொலைகாட்சி நிறுவனத்துக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக சசிகலா மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவானது செய்யப்பட்டது.

இதனை அடுத்து, சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் சாட்சியம் அளித்தார். இதன் தொடர்ச்சியாக, இந்த குற்றசாட்டு பதிவை ரத்து செய்யக்கோரி சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், "இந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முதல் குற்றவாளியாகவும், அதற்கு அடுத்தபடியாக இயக்குநர் சசிகலாவையும் விசாரணை நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.

ஆனால், குற்றச்சாட்டு பதிவின்போது சசிகலாவை முதல் குற்றவாளியாக மாற்றி நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சசிகலா மீதான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: டிவி சீரியல்களில் வரம்பு மீறும் ஆபாசம்! தணிக்கைக் குழு அமைக்க நீதிமன்றத்தில் மனு!

இதற்கு மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ரஜினீஸ், "1994ஆம் ஆண்டு சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. சசிகலா மீது சரியான முறையில் தான் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், "ஒரு நிறுவனத்தின் தலைவராக இருந்தால், அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரும்போது அதன் தலைவர் அதை எதிர் கொள்ள வேண்டும். அமலாக்கத்துறையிடம் ஆவணங்கள் இருந்தால் தொடர்ந்து விசாரணை நடத்தலாம்" என்று தெரிவித்தனர்.

மேலும், அன்னிய செலாவணி மோசடி வழக்கின் குற்றச்சாட்டு பதிவின்போது சசிகலாவின் பெயர் ஏன் மாற்றப்பட்டது? என அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை நாளைய தினத்திற்கு (டிச.11) ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.