ETV Bharat / state

தருமபுரம் ஆதீனம் விவகாரம்; "பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" - உயர் நீதிமன்றத்தில் காவல்துறை வாதம்! - Dharmapuram Adheenam Case - DHARMAPURAM ADHEENAM CASE

Dharmapuram Adheenam Case: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான பாஜக நிர்வாகி அகோரத்தின் ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dharmapuram Adheenam Case
Dharmapuram Adheenam Case
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 2:22 PM IST

சென்னை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். இவரின் உதவியாளர் விருதகிரி என்பவர், மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் மனு ஒன்றை கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அளித்துள்ளார்.

அதில், தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச விடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்ததாக வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டியதாகவும், அதற்கு செம்பனார்கோவிலைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், செம்பனார்கோவில் ஆகியோர் தூண்டுதலாக இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் அகோரம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ் செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அகோரத்திற்கு எதிராக 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும் காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை, பதில் மனுவாகத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு (ஏப்ரல் 10) ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி.. கோவையைச் சேர்ந்த அமைப்பின் நோக்கம் என்ன? - LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.