ETV Bharat / state

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு! - E Pass for Ooty and Kodaikanal - E PASS FOR OOTY AND KODAIKANAL

E-Pass for Ooty and Kodaikanal: ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறையை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 4:31 PM IST

சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை ஊட்டி, கொடைக்கானலில் மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த இ-பாஸ் வழங்கும் முன் வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம்? எத்தனை பேர் வருகின்றனர்? ஒரு நாள் சுற்றுலாவா? அல்லது தொடர்ந்து தங்குவார்களா? என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும் என இரு மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று (ஜூன் 28) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது குறித்து நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜராகியிருந்த தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாகவும், இ-பாஸ் முறையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கலாம் எனவும் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஊட்டி, கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கொலை வழக்கில் விடுதலையான திமுக முன்னாள் எம்எல்ஏ; மேல்முறையீட்டுக்கு பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவு! - DMK EX MLA Ranganathan case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.