சென்னை: திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி அருகே உள்ள அதனவூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இவ்வாறு அவர் தாக்கல் செய்த மனுவில், கிராமத்தில் தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்துக்கான தனி பட்டாவில், கோவிந்தராஜ் என்பவரின் திருப்பத்தூர் தாசில்தாரராக இருந்த சிவபிரகாசம் சேர்த்துள்ளதாகவும், இந்த பிரச்னைக்கு தீர்வு காண 20 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தாசில்தாரருக்கு எதிராக அளித்த புகாரை விசாரித்து 12 வாரங்களில் முடிவெடுக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது எனக் கூறியுள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர், அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், புகாரை திரும்பப் பெறும்படி கூலிப்படையினரை வைத்து தன்னை மிரட்டி வருவதாகவும், இதுசம்பந்தமாக ஜோலார்பேட்டை காவல்துறையில் புகார் அளித்தும் தாசில்தாரர் அரசு ஊழியர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், தனது புகாரை விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி சவுந்தர், தாசில்தாரர் சிவபிரகாசத்துக்கு எதிரான புகார் மீது மூன்று வாரங்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஜோலார்பேட்டை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நிலத்தகராறில் கூலி ஆட்களை ஏவி குடும்பத்திற்கு மிரட்டல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!