சென்னை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் தலைமை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்ததாக வினோத், செந்தில், விக்னேஷ் மற்றும் உடந்தையாக இருந்ததாக செம்பனார்கோவிலைச் சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கொடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொடியரசு, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "எனக்கு சர்க்கரை நோய் மற்றும் இருதய பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல்நிலை மேலும் பாதிக்கப்படும் என்பதால், எனக்கு ஜாமீன் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி T.V.தமிழ் செல்வி, கொடியரசின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஸ்ரீமுஷ்ணம் விவகாரம்; மோதலில் பெண் உயிரிழந்தது தொடர்பாக மேலும் மூவர் கைது! - Cuddalore Issue