ETV Bharat / state

உரிமையியல் நீதிபதிகள் நியமன வழக்கு; தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு! - civil judges appointment case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 5:28 PM IST

Civil Judges appointment case: முறையான இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி வெளியிடப்பட்ட பட்டியலின்படி 245 உரிமையியல் நீதிபதிகளுக்கான நியமன உத்தரவை ஜூலை 10ஆம் தேதிக்குள் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம் (Credits-ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த 245 உரிமையியல் நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வுப் பட்டியல், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் வெளியிடப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்வுப் பட்டியலை ரத்து செய்ததுடன், உரிய இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி ஏற்கனவே தேர்வு பட்டியலில் இடம்பெற்றிருந்த 14 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிதாக 14 பேர் சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட பட்டியலை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்நிலையில், தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 14 பேர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திருத்தப்பட்ட பட்டியலின் அடிப்படையில் நியமன உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நியமன நடைமுறைகள் துவங்கியுள்ளதாகவும், ஆளுநர் ஒப்புதலுக்காக பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை ஜூலை 10ஆம் தேதி தள்ளிவைத்த நீதிபதிகள், அதற்குள் நியமன உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு; மேலும் 4 மாத காலம் அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.