ETV Bharat / state

'குணா' படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை ரத்து! - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு! - guna movie - GUNA MOVIE

Guna : குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குணா போஸ்டர், சென்னை உயர்நீதிமன்றம்
குணா போஸ்டர், சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 9:18 PM IST

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991ம் ஆண்டு குணா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படம் மீண்டும் கடந்த ஜூன் 21ம் தேதி திரையரங்களில் ரீ-ரிலீஸ் செய்ய போவதாக அறிவிப்பு வெளியானது.

இந்த சூழலில் படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, குணா படத்தை மறு வெளியீடு செய்வதற்கு தடை விதிக்கக் கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்து பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனங்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 வருடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2008 முதல் 2013ம் ஆண்டுடன் அந்த காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையை கோர முடியாது என தெரிவித்தார்.

மேலும், பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனங்கள் தான் படத்தை வெளியிடுவதற்கான உரிமையை வைத்திருப்பதால், குணா படத்தை மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதி, குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவரை நியமித்து, திரையரங்கில் குணா மறு வெளியீடு வசூல் தொகையை இந்த வழக்கின் பெயரில் வரவு வைக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்தி வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : 'கோழிப்பண்ணை செல்லதுரை' ட்ரெய்லரை பார்த்து இயக்குநர் சீனு ராமசாமியை வாழ்த்திய புதுச்சேரி முதல்வர்! - Puducherry CM praise seenu ramasamy

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.