ETV Bharat / state

தனியார் நிறுவனங்களிடம் வரி வசூலிக்காதது ஏன்? தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Property tax: திருவள்ளூர் தொடுக்காடு பஞ்சாயத்துப் பகுதியில் உள்ள 26 பெரிய நிறுவனங்களிடமிருந்து சொத்து வரியை வசூலிக்காத விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 10:27 PM IST

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பஞ்சாயத்து ஒன்றியத்தில் உள்ள தொடுக்காடு பஞ்சாயத்தின் தலைவர் பி.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,"தொடுக்காடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் 26க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில நிறுவனங்கள் அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளன.

இந்த நிறுவனங்கள் சாலைகள், குடிநீர், தெரு விளக்குகள் எனப் பஞ்சாயத்தின் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை இந்த நிறுவனங்கள் ஈட்டுகின்றன. ஆனால், பஞ்சாயத்திற்கு இந்த நிறுவனங்கள் சொத்துவரி உள்ளிட்ட வரிகளைத் தரவில்லை. எனவே, இந்த நிறுவனங்கள் தொடுக்காடு பஞ்சாயத்துக்குத் தரவேண்டிய வரிகளை வசூலிக்க வருவாய் வசூல் அதிகாரியை நியமனம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியர் தரப்பில் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரியைச் செலுத்தவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் சட்டப்படி உரிய நடவடிக்கையை எடுக்கலாம் என்று கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி பஞ்சாயத்துக்குத் தலைவர் வெங்கடேசன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர் செயல்படுத்தவில்லை என்றார். இதையடுத்து, இந்த வழக்கில் அரசுத் தரப்பு பதில் தருமாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் 1ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: சென்னையில் புகார் அளிக்க வந்தப் பெண்ணிடம் அத்துமீறிய காவலர்.. பணியிடை நீக்கம் செய்த துணை ஆணையர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.